அத்துமீறும் தமிழக மீனவர்களை கட்டுபடுத்த துப்பாக்கிச் சூடு நடத்துவதே ஒரே வழியென அரசாங்கம் அறிவித்துள்ளது.
வட மாகாண மீனவ சங்கத் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் அதனை ஒருபோதும் அமுல்படுத்தாது என்ற எண்ணத்திலேயே இந்திய மீனவர்கள் தொடர்ந்தம் அத்துமீறுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்திய மீனவர்களை கைதுசெய்வதிலும் பார்க்க அவர்களை சுடுவது எமக்கு இலகுவான விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையினருக்கு இந்திய மீனவர்களை சுடுவதற்கான அனுமதியை வழங்கியிருந்திருந்தால் மீனவர் பிரச்சினைக்கு என்றோ நாம் தீர்வை கண்டிருக்கலாம்.
எனினும், துப்பாக்கியால் சூடு நடத்தி இரு நாடுகளுக்கு இடையில் பகைமையை வளர்த்துக்கொள்ளும் நோக்கம் இலங்கை அரசாங்கத்துக்கு கிடையாது.
எவ்வாறாயினும், கலந்துரையாடல் மூலம் இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண்பதற்கே நாம் தொடர்ந்தும் முயற்சிக்கின்றோம்.
இதேவேளை, இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவும் தளர்த்தவும் அரசாங்கம் எச்சந்தர்ப்பத்திலும் பணிப்புரை விடுத்ததில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
சீதையின் மைந்தன்
இந்தியக் கடலோரக் காவல்படையா.?
இலங்கைத் தெலுங்கனின் கூலிப்படையா.?
”தமிழக மீன்வர்கள் எவரேனும் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால், அவர்களை கைது செய்யலாம் என்று நாங்கள் கூறியிருந்தோம். இப்பொழுது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றிருப்பதால் இந்தியா சார்பில் நாங்கள் சொன்னபடியே அவர்கள் (இலங்கை கடற்படையினர்) கைது செய்திருக்கிறார்கள்”
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத்த்தில் ஒருநாள் இலங்கை தெலுங்கு இனக்கொலை ஆட்சியாளர்களின் கடற்படையினர் ஒரே நேரத்தில் 112 தமிழக மீனவர்களை எல்லை தாண்டினார்கள் என்று கைது செய்து கொண்டு போய் இலங்கையில் சிறை வைத்த போது, மேற்கண்டவாறு ”மீனவர்கள் கைது சரியானதுதான். நாங்கள் சொன்னபடிதான் இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது” என்று வாக்குமூலம் தந்தவர் இந்திய கடலோற காவல்படையின் கிழக்கு மண்டல தளபதியாய் அன்று இருந்த சத்தியபிரகாஷ் சர்மா ஆவார். (பத்திரிக்கை ஆதாரம் இணைப்பில் தரப்பட்டுள்ளது)
அப்பொழுது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த்து. இப்போது நடப்பது பாரதிய சனதா கட்சி தலைமையிலான ஆட்சி. ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. தமிழக மீனவனின் கவலை தீரவில்லை. ஒரே ஒரு முன்னேற்றம் என்னவென்றால், அன்று காங்கிரசு ஆட்சியில் மீனவர்களை மட்டும் இலங்கை தெலுங்கு இனக்கொலை ஆட்சியாளர்கள் கைது செய்து கொண்டு போனார்கள். இன்று பாரதிய சனதா கட்சியின் ஆட்சியில் படகுகளையும் சேர்த்துக் கொண்டு போகிறார்கள்.
நமது கேள்வி இதுதான். அன்று காங்கிரசு ஆட்சியில் இந்திய கடலோற காவல்படை கேட்டுக் கொண்டதால்தான் இலைங்கை கடற்படை எல்லைதாண்டும் தமிழக மீனவர்களை கைது செய்து கொண்டுபோய் சிறை வைத்ததாக இந்திய கடலோற காவல்படையின் கிழக்கு மண்டல தளபதியாய் இருந்த சத்தியபிரகாஷ் சர்மா வாக்குமூலம் தந்திருக்கிறார். இன்று பாரதிய சனதா கட்சியின் ஆட்சியிலும் இந்திய கடலோர காவல்படை கேட்டுக்கொண்டதால் தான் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களோடு அவர்களின் படகுகளையும் சேர்த்து கைது செய்து கொண்டு போகிறார்களா.?
இந்திய அரசு இந்திய குடிமக்களின் அரசா? அல்லது இலங்கை தெலுங்கு இனக்கொலை ஆட்சியாளர்களின் நிழல் அரசா?
இந்திய கடலோர காவற்படை இந்திய குடிமக்களின் காவற்படையா.? இலங்கை தெலுங்கு இனக்கொலை ஆட்சியாளர்களின் கூலிப்படையா?
மீனவர்களை விடுவித்தாலும், படகுகளை விடுவிக்காதீர்கள் என நான் தான் இலங்கை அரசுக்கு சொல்லியிருக்கிறேன் என்ற சுப்ரமணியசுவாமியின் தேசத் துரோகத்திற்கு பாரதிய சனதா கட்சியின் மோடி அரசு தந்த பரிசுதானா, அவருக்கு தரப்பட்ட இந்திய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி.?
மேற்கண்ட கேள்விகளை பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் எழுப்பும் தெம்பும் திரானியும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருக்குமே இல்லையா.? அல்லது தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழர் யாருமே இல்லையா.?
சீதையின் மைந்தன்
தாயகத் தமிழர் பேரியக்கம்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்
http://www.katchatheevu.com
எல்லை தாண்டி மீன் பிடிப்பது தவறு என தமிழ்நாட்டு மீனவர்கள் உணராத வரையில் இந்த பிரச்னை ஓயப்போவதில்லை.
டேய் வெங்காயம் — கட்ச தீவை தாரை வார்த்தத்தினால் வந்த வினை அத்துடன் என்ன ஒப்பந்தம் எழுதப்பட்டது என்று யாருக்குமே தெரியாதிருக்கிறது போலும். உன்னைப்போன்ற எவனோ ஒருவன்தான் இதற்க்கு எல்லாம் காரணமாக இருக்கலாம்– இந்திய கடல் எல்லை படை என்ன செய்து கொண்டிருக்கிறது? சிங்களவன் சொல்லும் எல்லை தாண்டுதல் எவ்வளவுக்கு உண்மை? எல்லாம் கையால் ஆகாத வடக்கத்தியனின் அக்கறை இன்மைதான்.