இலங்கையில் திருவள்ளுர் சிலைகள் வைக்கப்படுவதற்கு சிங்கள ஊடகமொன்று அதிருப்தி தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தி வருமாறு:-
தமிழக கவிஞர் ஒருவரின் சிலைகள் இலங்கையில் வைப்பதற்கு திட்டம்
தமிழகத்தின் தமிழ் கவிஞரான திருவள்ளுவர்களின் 16 சிலைகள் இலங்கைக்கு கொண்டு வந்து நாடு முழுவதிலும் அவற்றை வைக்க எடுக்கும் முயற்சி பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது.
கொழும்பு, மாத்தளை, ஹட்டன், நாவலப்பிட்டி, புத்தளம், சாவகச்சேரி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்ப, கட்டைப்பறிச்சான் ஆகிய நகரங்களில் இந்த சிலைகள் வைக்கப்பட உள்ளன.
தமிழக கவிஞர் ஒருவரின் சிலைகள் இலங்கையில் வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.எனினும் இது குறித்து மக்களினதோ மாகாணசபைகளினதோ கருத்து கோரப்படவில்லை.
தமிழகத்தின் வீ.ஜீ.வீ என்ற நிறுவனமே இந்த சிலைகளை வழங்குகின்றன.
இந்த சிலைகளுக்கான சுங்கத்தீர்வையை யார் செலுத்தினார்கள் என்பது இதுவரையில் தெரியவரவில்லை என சிங்கள பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com
1. போர் முடிந்த அறிவிப்போடு இலங்கையில் பேரினவாத சிங்கள ராணுவத்தால் நாசப் படுத்தி தரைமட்டமாக்கப் பட்ட எத்தனையோக் கோயில்கள். அப்போதெல்லாம் எந்த ஊடகமாவது அதிருப்தியோ, கண்டனமோ தெரிவித்துள்ளதா? 2. அடுத்து முன்னாள் அதிபர் ராஜபக்சே தமிழில் பாடப் பட்ட தேசியக் கீதத்தை ரத்துச் செய்தார். அவர் மக்களின் கருத்தைக் கேட்டாரா; மாகாணப் சபையின் கருத்தையும் கேட்டாரா? வள்ளுவர் சிலையை வைக்க மக்களின் கருத்தை, மாகாணக் கருத்தைக் கோரவேண்டுமென்றால், இலங்கை மத சார்பற்ற நாடல்ல, அங்கே புத்தமதக் கோட்ப்பாட்டிற்குத்தான் இடமென்று சொல்கின்றீர்களா? பார்க்கப் போனால், பேரினவாத பெரும்பான்மையான ஈழத் தமிழர்களை பூர்வேகக் குடிமக்களாகவும், தேசிய இனமாகவும் நீங்கள் ஏற்கவில்லை! அங்கே அவர்களின் கலாச்சாரங்கக்கும் வழிப் பாட்டுமுறைகளுக்கும் இலங்கையில் இடமில்லையென்று சொல்கின்றீர்களா? இலங்கையிலுள்ள ஆட்சியாளர்கள் இங்கு சொல்லப் பட்ட வெளிப்படையான உண்மைகளை திறந்த மனத்தோடு கருத்தில் கொண்டு மக்களுக்குப் பதில் சொல்லமுன்வருவார்களா?
திருவள்ளுவர் சிலைகளை ஈழத்தில் வைக்க யாரை கேட்க வேண்டும்? திருவள்ளுவர் சிலையை புத்த கோவில்களில் வைக்க கேட்க வில்லையே? சிங்களவன் திமிர் பிடித்து ஆடுவது இந்தியாவின் கையால் ஆகாத தனத்தால். அத்துடன் தமிழ் நாட்டு தமிழன்களுக்கு முதுகு எலும்பில்லை — உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி பேசியே நம் இனத்தை நாறடித்து விட்டான்கள்.
திருக் குறளின் அருமையை உணராத மடையர்கள் ஊரில் திருவள்ளுவர் சிலை வேண்டாமே. நாமே நமது தமிழ் சான்றோரை மற்றவர் அவமதிக்க வழி செய்ய வேண்டாமே.