வெற்றுக் கோஷங்கள் மற்றும் ராஜபக்ச போன்ற மனிதர்களைக் காட்டி மக்களை ஏமாற்றும் நாடகத்தினையும் தவிர்த்து, ஒரு பொறிமுறைத் தன்மையினைச் செயற்படுத்த முன்வரவேண்டும்.
சர்வதேச விசாரணை மூலம் மாத்திரமே தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.*
யாழ். கந்தர்மடத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கான பொறுப்புக் கூறல்கள் தொடர்பாகத் தற்போது அரசாங்கம் தெளிவான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள அரசாங்கத்தினைப் பொறுப்புக் கூறவைக்கவேண்டும்.
இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறை, ஒரு பக்கச் சார்பான வகையில் முற்று முழுவதாகப் பொறிமுறைத் தன்மையினை இழந்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
1. மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம் சர்வதேச விசாரணைக்கு இந்தியா எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டார்கள்; ஆதரவும் கொடுக்கவும் மாட்டார்கள். ஏதாவது ஒருவகையில் இலங்கைக்கு ஆதரவாகவே இன்றும் செயல்படுவார்கள். இந்தியா மேலிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் என்றோப் போய்விட்டது. 2. போர் நடந்தப் போது ராஜபக்சேதான் இலங்கை அதிபர். இனப் படுகொலை செய்தவனும் அவன்தான். இருந்த இந்துக் கோயில்களையெல்லாம் உடைத்துத் தள்ளியவனும் அவன்தான். அப்போது அவன் இந்தியா வந்தப் போது அவனுக்கு சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்றதும் இதே இந்திய அரசுதான். அங்கே இந்தக் கோயில்களை உடைத்த அவன் இந்தியா வந்தப் போது, திருப்பதியில் சாமிக்கு கும்பிட வந்தானே. என்ன பகல் வேசமாடா இது? 3. ஈழத் தமிழர்கள் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாமலும், இந்திய ஆட்சியாளர்களின் அறிவுக்கு ஈடுக் கொடுக்கும் அளவிற்கு சர்வ தேச அரங்கில் இனிமேல் தங்களின் காய்களை நகர்த்த வேண்டும். சர்வ தேச நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டும். சர்வ தேச சமூகத்திடம் தங்களின் நியாயத்தை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான் நல்லத் தீர்வுக் கிடைக்கும்.