யாழ் குடாநாட்டில் சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலை!

யாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று முடிவு செய்தனர். இதற்கு பல்லை இழித்து குறித்த தமிழர்கள் மாடு போல தலை ஆட்ட , சிங்கள ராணுவம் தேரை இழுத்துள்ளது.

jaffna theer2

இங்கே இச்சம்பவத்தை பார்க்க ஒரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. 2009ம் ஆண்டு மே 18 க்குப் பின்னர் கொத்துக் கொத்தாக பல மக்கள் சென்று ராணுவம் அமைத்த தற்காலிக முகாம்களில் தங்கினார்கள் அல்லவா ? அந்த வேளைகளில் அங்கே மதிய உணவு சமைக்கப்படுவது வழக்கம். ஒரு சமைக்கப்பட்ட மதிய உணவு பெரும்பகுதியாக மிஞ்சி இருந்தது. பலர் அதனை உண்ணவில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்று குழம்பிப் போன ராணுவ அதிகாரி ஒருவர் ஏன் உங்களில் பலர் இன்று சாப்பிடவில்லை என்று கேட்க்க. “பின்ன சாதி குறைஞ்ச ஆளை சமைக்க விட்டா நாங்கள் எப்படி சாப்பிடுவது” என்று மக்கள் பதில் கூறியுள்ளார்கள். உடமையை இழந்து , உறவை இழந்து வீட்டை இழந்து , சிங்கள ஆமி காரன் காம்பில் இருந்த வேளை கூட இவர்கள் ஒற்றுமையாக இல்லை. அங்கேயும் சாதி பார்த்திருக்கிறார்கள்.

இதற்கு ஆமி அதிகாரி ஒன்றைச் சொன்னாராம். நான் உங்கள் தலைவரை(பிரபாகரனை) இதுவரை பார்த்ததே இல்லை. ஆனால் இவ்வளவு காலம் உங்களை எல்லாம் அவர் கட்டி பாதுகாத்துள்ளார் என்று அது பெரிய விடையம் தான் என்று. அவர் கூறினாராம் …. இப்படி இருக்கிறது இன்றைய தமிழர்களின் நிலை.

-http://www.athirvu.com

TAGS: