சீனாவின் தொடர்புத்துறை கட்டமைப்பு நிறுவனம்(சிசிசிசி), மலேசிய அரசாங்கம் 1எம்டிபி கடனைக் கட்டுவதற்கு உதவியாக கிழக்குக் கரை இரயில் திட்ட(இசிஆர்பி)த்தின் செலவுத் தொகையை உயர்த்தத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தது.
“ அப்படிக் கூறப்படுவது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது” என சிசிசிசி தெரிவித்ததாக ஆஸ்திரேலியன் என்னும் நாளேடு அறிவித்துள்ளது.
ஏற்கனவே ரிம30 பில்லியன் ஆகும் என்று மதிப்பிட்டிருந்த இஆர்சிபி இப்போது ரிம60 பில்லியன் என்று மதிப்பு உயர்த்தப்பட்டு சிசிசிசி நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று சரவாக் ரிப்போர்ட் கூறிக்கொண்டிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது அந்நிறுவனம் இவ்வாறு கூறியது.
சரவாக் ரிபோர்ட் அவ்வாறு கூறியிருப்பதைப் பொதுப் பணி அமைச்சர் பாதில்லா யூசுப்பும் மறுத்துள்ளார்.


























மிகவும் உண்மையானவன்கள்– நம்பிக்கை நாயகன் போல் மிகவும் நம்பிக்கையானவன்கள்-நம்பலாம்.