கியூபா நாட்டின் புரட்சிகர தலைவர் பிடல் காஸ்ட்ரோ தனது 90வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
தீவு நாடான கியூபாவை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த இவர் கடந்த பல மாதங்களாக பொது மக்கள் பார்வைக்கு வராமல் உள்ளார். இன்று அவர் வெளியே வந்து காட்சி தருவாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது சகோதரர் ரால் பதவியேற்ற பிறகு, கியூபா நாடு மாற்றங்களை அடைந்துவிட்டாலும், பிடலின் செல்வாக்கும் குறைந்துவிட்ட போதிலும், அவர் கியூபா நாட்டு மக்களால் இன்றும் மதிக்கப்படுகிறார்.
எந்த வித அதிகாரபூர்வமான நிகழ்ச்சிகளும் திட்டமிடப்படவில்லை. ஆனால் கியூபாவின் நெருங்கிய கூட்டாளி நாடான வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலா மதுரோ ஹவானாவில் நடக்கும் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார். -BBC