புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் சந்தேகத்து இடமாக உயிரிழந்தவர்களுடைய விவரங்களை உடனடியாக வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேட்டுள்ளார்.
உயிரிழந்த முன்னாள் போராளியின் பெயர், சிகிச்சை பெற்ற வைத்தியசாலை, உயிரிழந்த திகதி இந்தத் தகவலை வழங்குபவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அல்லது பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தில் எழுத்து மூலம் கையளிக்குமாறும் சுகாதார அமைச்சர் கோரியுள்ளார்.
இந்த இடங்களில் கையளிக்க முடியாதவர்கள் யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சுகாதார அமைச்சில் நேரடியாகக் கையளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் போராளிகள் விஷ ஊசி ஏற்றப்பட்டமையால் உயிரிழப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இதுதொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனடிப்படையிலேயே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com

























