போகோஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிச்சிறுமிகளின் வீடியோவை 3வது முறையாக அத்தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்14 ஆம் திகதி நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள அரசாங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பள்ளி மாணவிகளை போகோஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
இந்த சம்பவம் மூலம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த தீவிரவாதிகள், தாங்கள் கடத்தி சென்ற மாணவிகளை தற்கொலைப்படை தாக்குதலுக்கும், பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தினர்.
இதில் 57 மாணவிகள் தப்பித்து வந்தவிட்டபோதிலும், 218 மாணவிகளின் நிலை என்ன என்பது குறித்து மர்மமாகவே இருந்தது.
மேலும் அந்த மாணவிகளை திருமணம் செய்துகொண்டதோடு மட்டுமல்லாமல், கிறிஸ்த்துவ மாணவிகளை இஸ்லாமிய மதத்தில் இணையும்படி வற்புறுத்தியாக, அங்கிருந்து தப்பிவந்த சிறுமிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சிறுமிகள் இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ள இத்தீவிரவாதிகள், “உங்கள் குழந்தைகள் எங்கள் கையில் தான் இருக்கின்றன” என்ற செய்தியையும் தெரிவித்துள்ளனர்.
-http://news.lankasri.com