இந்திய புலனாய்வு அமைப்பை நம்பிய புலிகள்! இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்

srilanka-killing-fields-newஇறுதிப் போரின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் சரணடைந்தமையின் பின்னணியில் இந்திய ரோ அமைப்புக்கு பாரிய பங்கிருந்ததாக நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் சரணடைந்தால், அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படாமல் சர்வதேச நாடுகளிடம் கையளிக்கப்படுவார்கள் என்று உறுதி மொழியை ரோ உளவு அமைப்பு வழங்கியிருந்தது.

‘ராஜூவ் காந்தியின் கொலை’ என்ற நூலில் அதன் ஆசிரியை லீனா கோபால் இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளரான லீனா கோபால் ராஜூவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவரை செவ்விக்கண்டவராவார்.

2009 ஆண்டு இறுதிப்போரின் இறுதி நாட்களில் விடுதலைப்புலிகளின் சரணடைதலை தெரிந்துக்கொண்ட ரோ அமைப்பு, இலங்கை அரசாங்கத்திடம் அவர்கள் கையளிக்கப்படமாட்டார்கள் என்ற உறுதியை அவர்களுக்கு வழங்கியது.

இதனை நம்பியே பெருமளவான புலிகள் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தனர். இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றும் லீனா கோபால் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் தலைவர் – பாலசிங்கம் உறவை பிரித்தது யார்?? 2009இன் பின் மௌனம் கலைக்கும் உண்மைகள்…

தமிழரின் போராட்டத்தில் துறைசார் வல்லுனர்களின் நிலை என்ன? புலிகளின் கட்டமைப்பில் இராஜதந்திரிகளைக் கையாழும் விடயம் எப்படி காணப்பட்டது என்பது பற்றி இந்த வார வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், போராட்ட காலத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன், மதியுரை அறிஞர் பாலசிங்கம் உறவின் விரிசலுக்கு காரணம் யார்? புலிகளின் தலைமையும், மதியுரை அறிஞர் பாலசிங்கமும் இறுதியாக எப்போது கதைத்துள்ளார்கள்? ஆசிய கண்டத்தல் இந்தியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து, போன்ற பல்வேறு வகையான சிக்கலான வினாக்களுக்கு லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழ் வரலாற்று ஆசான் மு.திருநாவுக்கரசு ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான மாத்தையா ஒரு உளவாளி!

ltte.piraba-mathayaதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட மாத்தையா எனப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இந்திய றோ உளவுப் பிரிவின் உளவாளி என தெரிவிக்கப்படுகிறது.

1989ஆம் ஆண்டு முதல் மாத்தையா றோ உளவாளியாக கடமையாற்றியிருந்தார் என ஊடகவியலாளர் நீனா கோபல் எழுதியுள்ள நூல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இல்லாதொழித்து புலிகளின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு மாத்தையாவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் மாத்தையா றோ உளவுப் பிரிவிற்காக கடமையாற்றிய குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார் என்பது இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தெரியாது எனவும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் பற்றிய விபரங்களை இந்தியாவிற்கு மாத்தையா வழங்கியததாக கூறப்பட்டுள்ளது.

இந்த கப்பல் தாக்குதலில் புலிகளின் முக்கிய உறுப்பினர் மற்றும் பிரபாகரனின் சிறு வயது தோழருமான கிட்டு உயிரிழந்தார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாத்தையாவை கைது செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி அவரை கொலை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது 257 சகாக்களையும் விடுதலைப் புலிகள் கொன்று சடலங்களை குழியொன்றில் இட்டு தீயிட்டுக் கொளுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, றோ உளவுப் பிரிவை தவிர்ந்து, இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் ஏனைய தரப்பினரும் வடக்கு, கிழக்கில் தகவல்களை திரட்டியதாக அந்த நூலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

 

TAGS: