காணாமல் போனோருக்கான நீதி?

relatives_of_missing_peopleகாணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியமனிதாபிமானப் பிரச்சினையாகவுள்ளது. எனினும் இப்பிரச்சினை இதுபலருக்கு பலவிதமான வடிவங்களில் தென்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தளவில் அவர்களது உறவுகள் மீள வேண்டும்,காணாமல் செய்யப்பட்டோரின் நிலை என்ன என்ற கேள்விகள் கொண்டதாக உள்ளன.இதனை அண்மையில் வெளியாகிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைகூட மீளவும் நினைவுறுத்தியிருந்தது.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினரைப் பொறுத்தளவில் படையினரைக்காட்டிக்கொடுக்கும் முயற்சியினை அரசாங்கம் செய்கின்றது என்றவிசமப் பிரசாரத்திற்குரிய ஒன்றாகவுள்ளது.

மஹிந்த ஆதரவுச் சக்திகள் காணாமல் போனோர் விடயத்தினை தமிழர் சார்ந்தபிரச்சினை மட்டுமே என அடையாளப்படுத்தி அதன் ஊடாக எதாவது ஓர் வகையில்சிங்கள மக்களை குழப்பி அரசியல் லாபம் தேட எத்தனிக்கும் கைங்கரியத்தில்இறங்கியுள்ளன.

நடைமுறையில் உள்ள அரசாங்கத்தினைப் பொறுத்தளவில் இப்பிரச்சினைசர்வதேச அழுத்தங்களுக்கு உரிய பிரச்சினையாகவுள்ளது. காணாமல் போனோர்பிரச்சினையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது விரும்பியோ விரும்பாமலோசர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான உத்தியாவும் உள்ளது.

இவ்வாறான பல்வேறுபட்ட நிலைமைகளுக்குள்ளேயே காணாமல் போனோரைத்தேடியறியும் அலுவலகத்தினை அமைப்பதற்கான சட்டமூலம் கடந்தவியாழக்கிழமையன்று நிறைவேறியுள்ளது.இச் சட்டமூலம் மஹிந்த சார்பு தரப்புக்களினால் பாராளுமன்றத்திற்குவெளியேயும் உள்ளேயும் மேற்கொள்ளப்பட்ட பாரிய எதிர்ப்புக்களையும்தாண்டி நிறைவேற்றப்பட்டுள்ளது.

மஹிந்த தரப்பு அணியினர் இவ் அலுவலகம்இராணுவத்தினரைத் தண்டிப்பதற்கானது, இதன் மூலம் படையினர்காட்டிக்கொடுக்கப்படப் போகின்றனர் என பகிரங்கமாகவே பிரசாரத்தில்ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு அரசாங்கம் இவ் அலுவலகத்திற்கு நீதிமன்ற அதிகாரமோ அல்லதுதண்டணை வழங்கும் அதிகாரமோ கிடையாது எனத் தெரிவித்திருக்கின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக யுத்தத்தில் ஈடுபட்ட தலைவர்களைப்பாதுகாப்பதற்கும் அவர்களது கௌரவத்தினை ஏற்படுத்துவதற்குமானதுஎன வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றத்தில் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.இதன் அடிப்படையில் இங்கு நோக்கத்தக்க விடயம் ஒன்றுள்ளது.

அதாவது,காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இடம்பெறும்செயற்பாடுகள் படையினரைக் காட்டிக்கொடுப்பதற்கான முயற்சி எனபதவியில் இருந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அச்சம் கொள்கின்றார். இதன்மூலம் அவரே படையினருக்கும் காணாமல் போனோரின் நிலைக்குமானதொடர்புள்ளதென ஏற்றுக்கொள்கின்றார்.

அதிகாரத்திற்காக பிரயத்தனப்படும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலானஎதிரணியினர், சிங்கள மக்களை வெல்வதற்கானதும் வாக்குகள்கவர்வதற்கானதுமான பாரிய உத்தி இது எனக் கொண்டே காணாமல் போனோர் தொடர்பில்விசாரணை நடத்துவது படையினரைக் காட்டிக்கொடுப்பதற்கானதுஎன்கின்றனர்.

பாராளுமன்றினுள் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்றஎதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடதுசாரித் தலைவர்களில் ஒருவரானவாசுதேவ நாணயக்கார தலைமை தாங்கியுள்ளார்.

பாரிய எதிர்ப்புக்களுக்குமத்தியிலேயே காணாமல் போனோருக்கான ஓர் அலுவலகத்தினைத்தாபிப்பதற்கான முயற்சிகளைக் கூட மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியநிலைதான் இன்றும் நாட்டில் காணப்படுகின்றது. நாட்டில் பாரிய இனவாதமும்நீதியைப் பின்தள்ளுதலும் பொறுப்புக்கூறலில் இருந்து விடுபடுகின்றநிலையும் ஒன்றும் குறைந்து போகவில்லை என்பதற்கு இவை சான்றாக அமைகின்றன.

காணாமல் போனோர் அலுவலகம் பற்றிய சட்டமூலம் பற்றி கருத்துரைத்ததமிழ் தேசியக் கூட்டமைப்பு, உண்மை கண்டறியப்படும் முயற்சிஒன்றுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர்எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது நல்லிணக்கத்திற்கான ஆரம்பம்என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருப்பது, நல்லிணக்கவேளையில் அதற்காக தமிழ் மக்களின் நம்பிக்கையினை அரசுக்குத்தெரிவிக்கும் சமிக்ஞைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

எனினும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தளவில் காணாமல் போனோர் அலுவலகம்தன் பணியை நிறைவுறுத்தும் வரையில் அது பற்றி பலதரப்பட்ட சந்தேகங்கள்அவர்களிடம் இன்றும் உள்ளன. இதுபற்றி அவர்களிடம் கோரிக்கைகளும் உள்ளன.

காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம் என்பதை (office of missingpersons) என்பதைகையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடியறியும் அலுவலகம் (office for Families of searching Handed kidnappedand forcible Disappeared) என்று மாற்றுமாறு நல்லிணக்க செயலணியிடம்வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடியறியும் குழுவும் இணைந்து கோரியிருந்தன.

அவர்கள் காணாமல் போனோர் என்றவருகையில் அது பலாத்காரமாகக் காணாமல் போனோர் என்பதைஅடையாளப்படுத்தவில்லை எனத் தெரிவித்திருந்தன.இதற்கு அப்பால் காணாமல் போனோர் அலுவலகம் பற்றி இக் கட்டுரைக்காக காணாமல்போனோரின் குடும்பங்களுடன் பேசும் போது, இவ் அலுவலகத்தின்பிரதிநிதித்துவத்தில் அவர்களிடம் சந்தேகங்களும் கவலைகளும் உள்ளன.

இவ் அலுவலகம் காணாமல் போனோரின் உறவுகளை உள்ளடக்காது அரசாங்கத்தின்பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலேயே அங்கத்தவர்களைக்கொண்டுள்ளதுஎன்ற விமர்சனங்கள் உள்ளன.இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான ஓர் நிறுவனமாகவேவடிவமைக்கப்படுகின்றது என்ற விமர்சனங்கள் காணாமல் போனோரின்குடும்பங்களிடத்தில் உள்ளன.

காணாமல் போனோர் பிரச்சினையினைக் கையில்எடுத்து செயற்படும் பிரதிநிதிகளை இவ் அலுவலகத்திற்கான ஆரம்ப கட்டமுயற்சிகள் உள்ளன என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.இச் சட்டத்தினை உருவாக்குவதிலும் இச் சட்ட ஏற்பாடுகளுக்கும்முன்னதாக பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறான போக்குகள்இ இவ் அலுவலகம்முன்வைக்கும் தீர்வினைக் காணாமல் போனோரின் விடயத்தில்பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற துர்ப்பாக்கியநிலையுடையதாக அமையக் கூடாது என்பதுவே பாதிக்கப்பட்டோரின்நிலைப்பாடாகவுள்ளது.

காலத்திற்குக் காலம் காணாமல் போனோர் விடயத்தில் ஆணைக்குழுக்களும்விசாரணைகளும் கொண்டு வரப்பட்டன. இறுதியாக கற்றுக்கொண்ட பாடங்கள்மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் ஜனாதிபதிஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிமக்ஸ்வெல் பரணகமவைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்குழுவிடம்19 ஆயிரத்திற்கும் மேலான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. எனினும் இவ்ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்ட விதங்களில் பல்வேறு குறைபாடுகள்நிலவின.

மொழி பெயர்ப்புத் தவறுகள், சாட்சியங்கள் படையினரால்அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள், பதில்களை ஆணைக்குழு ஏற்கனவே தாம்நிர்ணயித்து விட்டு உள்நோக்கங்களுடன் கேள்விகள்பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.இக் குற்றச்சாட்டுக்களை மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்வெளிப்படையாகவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக நிலைமைகள் காணப்படும் போது, இவ்வாரம் யாழ்ப்பாணத்திற்குவருகை தந்த முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயற்பாடுகளில்ஈடுபட்டுள்ளவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா, காணாமல் போனோர்விடயத்தில் கடந்த கால விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும்அடிப்படையாகக் கொண்டு லேதிக விசாரணைகளை தொடரமுடியும்எனக்குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறாக காணாமல் போனோர் விடயத்தில் கடந்த கால ஆணைக்குழுக்களின்விசாரணைகள் முடிவுகளையும் அடிப்படையாக ஏற்றுக்கொண்டு தற்போதையஅலுவலகத்தின் செயற்பாடுகள் அமைந்தால் காணாமல் போனோர் விடயத்தில் தகுந்ததீர்வு அமையுமா என்ற கேள்வி பொதுவில் உள்ளது?

மேலும் காணாமல் போனவர்கள் தமது உறவுகளுக்காக ஏங்குபவர்கள். இவர்களின்விடயத்தில் இனிவருங்காலத்திலும் தாமதங்கள் பிரயோகிக்கப்படுமாயின்அது மக்களை மீளவும் பாதிக்கும் விடயமாகவே அமையும். தாமதிக்கப்படும்நீதியை மறுக்கப்படும் நீதி என்பார்கள்.

அந்த வகையில் தற்போது அரசாங்கம்எடுக்கின்ற நடவடிக்கையாவது பொருத்தமுடைய நியாயத்தினை காணாமல்போனோர் விடயத்தில் முன்வைக்க கூடியதாக அமைய வேண்டும் என்பதேஎதிர்பார்ப்பு.காணாமல் போனோரைக் கண்டறியும் அலுவலகம் ஊடாக காணாமல் போனோரைகண்டறிவதற்கான நடவடிக்கைகள் காணாமல் போனோர் சான்றிதழ் வழங்கல்காணாமல் போனோர் உயிருடன் இருந்தால் உறவுகளுக்கு அறிவித்தல் காணாமல் போனோர்புதைகுழிகள் பற்றி உறுதியான தகவல்கள் காணப்படுமாயின் அதனைத் தோண்டுமாறுநீதிமன்றங்களிடம் விண்ணப்பம் செய்தல் போன்ற செயற்பாடுகள் உள்ளடங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் காணமல் போனோரின் உறவுகள் தமக்கான நீதியைப்பொறுத்தளவில் எவ்வாறான மனப்பான்மையில் உள்ளனர் என்பது பற்றிய தெளிவானவெளிப்படுத்துகைகள் அவசியம்.இந்த இடத்தில் காணாமல் போனோரின் கருத்துக்களும் பங்கேற்பும் அதிகம் காணாமல்போனோருக்கான அலுவலகத்தினுள் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் தொடரப்படவேண்டியதேவையுள்ளது.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நாட்டில் வெள்ளை வான்களிலும் ஆயுத முனைகளிலும்கடத்தப்பட்ட தமது உறவுகள் வீடு திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயேஎப்போதும் காத்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டும் உறவினரின் கண்காண சரணடைந்தும் இன்று வரையில் வீடு திரும்பாதவர்கள் ஆயிரக்கணக்கில் இன்றும்காணாமல் போனோராக உள்ளனர்.

இவ்வாறாக நிலைமைகள் காணப்படுகையில் சர்வதேசத்தினையும் நடைமுறைஅழுத்தங்களையும் சமாளிப்பதற்கான அணுகுமுறையாக தற்போதைய அரசாங்கத்தின் காணாமல்போனோர் தொடர்பான அணுகுமுறைகள் அமையக்கூடாது என்பதுவே சகலரினதும் எதிர்பார்ப்பு.

-நிருபா குணசேகரலிங்கம்

-http://www.tamilwin.com

TAGS: