கொலம்பியாவில் 17 கைதிகளுக்கு சிறையிலே திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலீல் உள்ள Carcel villa Hermosa சிறையிலே குறித்த வெகுஜன திருமண விழா நடைப்பெற்றுள்ளது.
சிறை அதிகாரிகள் அனுமதியுடன் கைதிகள் நீண்ட காலமாக விரும்பி வந்த பெண்ணுடனே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிற உடையில் வந்த 17 மணப்பெண்களுக்கு, அவர் அவர்கள் துணையுடன் சிறையில் உள்ள பெரிய கூடத்தில் வைத்து திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது, சிறை தண்டனை முடிந்தவுடன் புதிய வாழ்க்கையை தொடங்குவோம் என ஒவ்வொரு தம்பதிகளும் உறுதியளித்துள்ளனர்.
சிறையில் சமூக பணியாக கருதி இந்த திருமணம் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. திருமணத்தின் மூலம் தண்டனை அனுபவித்த ஆண்கள், சமூகத்தல் ஒன்றிணைந்து வாழ முடியும் என சிறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
-http://news.lankasri.com






























அற்புதமான சிந்தனை …. இதுதான் வேண்டும் நமக்கு …. மறுவாழ்விற்க்கு இது ஒரு அற்புதம் ….
நல்ல அணுகுமுறை. குற்றவாளிகள் புதிய மறு வாழ்விற்கு ஆரம்பம்.