காணாமல் போனோருக்கான அலுவலகம் நிறுவுவது குறித்து மீள சிந்திக்குமாறு கோரிக்கை!

missing_002காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் நிறுவுவது குறித்து மீள சிந்திக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படைவீரர் அமைப்பு ஒன்றினால், அமெரிக்காவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை இலங்கையில் அறிமுகம் செய்வது குறித்து மீளவும் சிந்திக்குமாறு, தேசிய படைவீரர் ஒன்றியத்தின் அழைப்பாளர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசப்பிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நேற்று இந்தக் கடிதம் அமெரிக்கத் தூதுவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைவீரர்களுக்கும் அல்கொய்தா தீவிரவாதிக்கும் ஒரே விதமான நட்டஈடு வழங்கும் நடைமுறையை அமெரிக்கா பின்பற்றுமா என கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட நாடு ஒன்றில் சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னர், அந்த நாட்டின் அபிவிருத்தி குறித்தே கவனம் செலுத்தப்பட வேண்டும்.

காணாமல் போனோர் அலுவலகமொன்றை அமைப்பதனால் எவ்வித பயனும் கிடையாது.

இவ்வாறான காரியாலயமொன்றை அமைப்பதனை விடவும், இலங்கை மக்களின் நலன்புரிக்கு ஏதேனும் உதவிகளை வழங்க முடியும். அது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டுமென கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் எதிர்வரும் நாட்களில் ஊடகங்களுக்கு வெளியிடப்படும என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: