ஆதிவாசிகளும் போதை பொருளுக்கு அடிமையாகிவிட்டதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக ஆதிவாசிகளின் கலாச்சாரம் சீரழிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் சமூகப் பிரச்சினைத் தோன்றியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிவாசிகளின் தம்பான கிராமத்திற்குள் வரும் வெளியாட்கள் தமது பிரதேச மக்களை போதைபொருள் பாவனைக்கு அடிமையாக்குவதுடன், போதை பொருள் விற்பனைக்கும் தூண்டுவதாகவும் ஆதிவாசிகளின் தலைவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இதனால், ஆதிவாசிகளின் ஆயுள் குறைவடைவதுடன், அவர்கள் ஆதிவாசிகளுக்கே உரிய ஒழுக்க விழுமியங்களில் இருந்து விடுபடுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, போதைபொருள் சுற்றிவளைப்புக்காக தமது கிராமங்களுக்குள் வரும் பொலிஸாரால் தாம் அவமானங்களைச் சந்திப்பதாகவும் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தே தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
இலங்கையில் ஆதிவாசிகள் என்று இவர்களை குறிப்பிடுவது இல்லை …இலங்கையில் இவர்களை வேடர்கள் என்று குறிப்பார்கள் ..இவர்கள் பேசும் மொழிக்கு எழுத்து இல்லை ..அனால் முருகனை வழிபடுவார்கள் ..பலருக்கு கந்தசாமி என்ற பெயர் உண்டு ..தமிழர்களில் வாழ்கை முறை இவர்களிடம் உண்டு ..உண்மையில் ஈழ தமிழர்களின் வரலாறு இவர்களிடம் உள்ளது என்று சமீபத்தில் படித்தது ஜாபகம்