முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு தெரிவித்துள்ளார்.
எனவே, இலங்கை
மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மலேசியா தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இனச் சுத்திகரிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர், யுத்தத்தின் போது 200,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
-http://www.tamilwin.com
நீ இன்னும் இருக்கியா ????????????