தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து மலேசிய உயர்ஸ்தானிகராலயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மலேசிய வாழ் இலங்கையர்கள் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் அந்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை குருடர்களைப் போன்று பாராதிருந்தனர் என குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சில தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மலேசிய செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். எனினும் இது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.
கடவுச்சீட்டுக்களை புதுப்பித்துக் கொள்ளும் நோக்கில் தமிழர்கள் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வருகை தரும் போதும் அவர்கள் தொடர்பில் கண்காணிப்பு செய்யப்படுவதில்லை.
கடந்த காலங்களில் முன்னாள் மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் நடவடிக்கைகளினால் சில முக்கிய புலித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என குறித்த மலேசிய வாழ் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
-http://www.tamilwin.com
சொப்பன வாழ்வில் மிதந்து ….
சிங்களவர்கள் எதையும் நம்புவார்கள்
செம்பருத்திக்கு அன்பான வேண்டுகோள்: இது போன்ற ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்.
அரண்டவன் கண்ணனுக்கு இருண்டதெல்லாம் பேய்.
செம்பருத்தி ஆசிரியர் அவர்களுக்கு உண்மையானா செய்தி போடும்னு நினைக்குறீங்களா அல்லது சூடான செய்தி போடும்னு நினைக்குறீங்களா? உங்களுக்கும் ஏதாவது வியாபாரம் நோக்கம் உள்ளதா? . உங்கள் செய்தி உண்மை என்று படிப்பவர்கள் நிறைய பேர்.
இந்த மாதிரியான ஆதாரம் அற்ற செய்திகள் செம்பருத்தி போடுவதால் இங்கு என் பிரவேசம் இல்லை ! ( சின்ன பையன் ) கருத்து சரியே !
ஐயா வெற்றி! சின்னப்பையனைப் போல சிந்திக்காதீர்கள்! இப்படி ஒரு செய்தியின் மூலம் சிங்களவர்கள் எப்படிப் பிரச்சனையைத் திசை திருப்புகிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இது போனற செய்திகள் வெளியிடப்படுகின்றன! ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் அதனைப் பெரிது படுத்தி தமிழர்களை நசுக்க வேண்டும் என்பது தான் அவர்களது ஆசை! இது நமக்கும் எச்சரிக்கை தான்!