இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்தமைக்கு கடந்த ஆட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நவசமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அவர், வடக்கில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை கடந்த கால அரசாங்கம் வழங்கியிருந்தால் பாரிய யுத்த அழிவுகள் இடம்பெற்றிருக்காது.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்கள் மத்தியில் காணப்படும் யுத்த வடுக்களை நல்லாட்சி போக்கி வருகின்றது. எனினும், மக்கள் மீண்டும் ஒருபோதும் ஏமாற்றப்படக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
இப்படியும் சில சிங்களவர்கள் உள்ளார்கள்
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பணடரரநாயக்காவின் ..தாய் மாமா ..ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் மருத்துவ பேராசிரியர் திரு.விசக்ரம்சிங்க்கே ..ஈழம் கிடைத்தால் மாத்திரமே நாட்டில் காலடி எடுத்துவைப்பேன் என்று சபதம் செய்து உள்ளார் ..இவர் புலிகளின் தீவிர ஆதரவாளர் …அனால் தமிழ் வியாபாரிகள் ..வியாதிகள் எல்லாம் அறிக்கை மட்டும் அளித்து மகிழும்