வடக்கில் தற்போது மீண்டும் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று வடக்கில் சாதி பேதம் அதிகரித்துள்ளதால் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது இருக்க வேண்டும் என வடபகுதி மக்கள் தம்மிடம் தெரிவிப்பதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் பிரபாகரன் இருந்த போது சாதி பேதம் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்தமையால் மக்கள் மீண்டும் அவ்வாறான சாதி பேதமற்ற சூழலை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தற்போது அதிகரித்திருக்கும் இந்த சாதி பேதத்தை பற்றி யாரும் பெரிதாக பேசுவது இல்லை. சாதி அடிப்படையில் கிணற்றில் உள்ள நீரை அருந்தவிடுவது இல்லை. அதேபோல் இறந்தவர்களை புதைப்பதற்கு மயானங்கள் வழங்குவதில் சாதி பார்க்கப்படுவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமருவதற்கும் ஆசனம் வழங்குவது கூட வடக்கில் தற்போது சாதி பார்க்கப்படுவதாகவும் வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
தமிழருக்கு எதிராக திட்ட்ங்கள் தீடட இது ஒன்றே போதுமே சிங்களவனுக்கு.
இவ்வளவு மோசனமான நிலையா? 200 ஆண்டுகள் பின்னோக்கி போவது போல் தெரிகிறது?