அமெரிக்க வழக்குரைஞர்: ஆப்கானிஸ்தானில் அரசியல் கைதிகள் அன்வாரைவிட நன்றாக நடத்தப்படுகிறார்கள்

0772793821852e15e2f29f61e7d81eacமலேசியாவைவிட   ஆப்கானிஸ்தானில்   அரசியல்   கைதிகளைச்   சந்திப்பது  எளிது   என்கிறார்   அமெரிக்க   வழக்குரைஞர்   கிம்பர்லி   மோட்லி.

அன்வார்  இப்ராகிமின்    வழக்குரைஞர்  குழுவில்    ஒருவராக   புதிதாக  இணைந்துள்ள    மோட்லி,   ஆப்கானிஸ்தானில்   தாம்   தம்   கட்சிக்காரரைச்   சந்திப்பதற்கு   அனுமதி   மறுக்கப்பட்டிருக்காது     என்றார்.

“மலேசியா    அழகான    நாடு.  நான்  அன்வாரைச்   சந்திக்க    அனுமதி    மறுக்கப்பட்டது   என்பதைத்    தவிர    இங்குள்ள   மக்கள்   பரிவுடன்    நடந்து  கொள்கிறார்கள்.

“ஆனால்,   ஆப்கானிஸ்தானில்    சிரமம்  இருந்ததில்லை.  எடுத்த  எடுப்பிலேயே      என்   கட்சிக்காரரைச்   சந்தித்திருக்க   முடியும்”,  என்றாரவர்.

ஆப்கானிஸ்தானில்   சில   வேளைகளில்   அரசியல்   கைதிகள்   ஊடகங்களைச்    சந்திப்பதற்கும்   அனுமதி    உண்டு.

இங்கும்   ஊடகங்கள்   அன்வாருடன்    பேச  முடிகிறது.    ஆனால்,   அன்வார்  நீதிமன்றத்துக்குப்    பாதுகாப்பாக    அழைத்துச்   செல்லப்படும்போது   செய்தியாளர்கள்    சத்தமிட்டுத்தான்    அவருடன்   பேச   முடிகிறது   என்றாரவர்.

மோட்லி    அமெரிக்காவிலும்   ஆப்கானிஸ்தானிலும்    வழக்குரைஞராக   பணியாற்றியுள்ளார்.  அவர்  அன்வாரின்   வழக்குரைஞர்   குழுவில்   ஒருவராக   கடந்த   புதன்கிழமை    நியமிக்கப்பட்டார்.   நேற்று  மலேசியா  வந்திறங்கியதும்   அவர்  அன்வாரைச்   சந்திக்க     விரும்பினார்.   ஆனால்,  அவருக்கு   அனுமதி    மறுக்கப்பட்டது.

அனுமதி   மறுக்கப்பட்டதற்கு   உள்துறை     அமைச்சிடம்   விளக்கம்   பெற  முயன்றார்.      முடியவில்லை.