கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து 7 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை மனு!

Bangalore-riots01இந்தியா கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி இலங்கை தமிழர்கள் சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனுவை கையளிக்க 7 தமிழ் அரசியல் கட்சிகள்கூட்டாக தீர்மானித்துள்ளன.

காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழர்கள் மீதான தாக்கு தல்களை நிறுத்தக்கோரி இந்திய பிரதமருக்கு கோரிக்கை மனுவை கையளிப்பதற்காக இலங்கை தமிழரசு கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடுதலை கூட்டணி, ஈ.பி.டி.பி, ரெலோ, தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகிய 7 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாலை 6.30 மணி தொடக்கம் 8.30 மணி வரையில் கூட்டாக இணைந்து யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த கூட்டத்திலேயே கோரிக்கை மனுவை கையளிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கர்நாடகவில் தமிழர்கள் தாக்கப்படுவதை நிறுத்தகோரியும், தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதை நிறுத்தகோரியும் மனு ஒன்று நாளை இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் நட்ராஜனிடம் 7 கட்சிகளின் பிரதிநிதிகளால், கூட்டாக கையளிக்கப்படவுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: