இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பில்அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் பேச்சுவார்த்தைகளில்ஈடுப்பட்டு வருகின்றார்.
அமெரிக்காவின் ஜனநாயகம்,மனித உரிமைகள் மற்றும் தொழில் உரிமைகள் உதவி செயலாளர்டொம் மாலிநொவ்ஸ்கியும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை முன்னணி தமிழ் புலம் பெயர் குழுவினர் மூலம் உலகத் தமிழர்பேரவையில் இடம் பெற்றுள்ளது.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் எஸ்.ஜே. இமானுவல் மற்றும் உலகத் தமிழர்பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட ஏனைய முன்னணி உலகத் தமிழர்பேரவை உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில்பங்கேற்றுள்ளனர்.
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் போன்றவற்றிற்கு ஆதரவுஅளிக்கும் வகையில் இந்த விவாதம் அமைந்ததாக அமெரிக்காவின் உதவி இராஜாங்கசெயலாளர் நிஷா பிஸ்வால் டுவிட்டரில் செய்திவெளியிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com