கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் என்ன?

காணாமல்போக செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பில் விளக்கம் கோரும் இரண்டாவது சந்திப்பு முல்லைத்தீவில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு முல்லைத்தீவில் உள்ள வீரகத்தி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நேற்று மாலை 4.50 மணிக்கு ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வு, பாதிக்கப்பட்டவர்களால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று மாலை மூன்றுமணிக்கு ஆரம்பிப்பதாக கூறியிருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வருகை தாமதம் ஏற்பட்டதால் 4.50 ஆரம்பமாகியுள்ளது.

மேலும், இங்கு சிறப்பு விளக்கமளித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

தான் தாமதித்தித்து வந்ததற்கு முதலில் விளக்கத்தை கொடுத்தார். பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பணியகம் அமைக்கப்பட்டு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், அது சட்டத்தில் எவ்வளவு சாதகமாக அமையும் உள்ளிட்ட விடயங்களை விளக்கியுள்ளார்.

இதன்போது, பொதுமக்கள் தமது நிலைப்பாடுகளையும் மிக ஆணித்தரமாக முன்வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன் கந்தையா சிவநேசன் ஆகியோரே கலந்துகொண்டுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: