இலங்கையின் மணிமகுடமாக விளங்குகின்றது யாழ்ப்பாணம் வரலாற்று சிறப்புக்களையும் பெருமைகளையும் கொண்ட ஒரு குடா. அனைத்து வளங்களும் நிறைந்த ஒரு சொர்க்க பூமி தமிழர்களது தலைநகராக திருகோணமலை இருந்ததாலும் கூட உலகத்தில் வாழும் பன்னிரண்டு கோடிக்கு அதிகமான தமிழர்கள் தமது தலைநகராக யாழ்ப்பாணத்தையே கருதுகின்றனர்.
உலகம் வியக்கும் தலைவன் பிறந்ததாலேயோ என்னவோ யாழ்ப்பாணம் என்ற பெயருக்கே மதிப்பும் மரியாதையும் உலகெங்கிலும் உண்டு. கல்வியிலும் கலை கலாசாரத்திலும் சரி சிறந்து விளங்கும் யாழ்ப்பாணம் பல குண்டுகளை தன் நெஞ்சிலே தாங்கிக் கொண்டது.
ஏராளமான இழப்புக்களை சந்தித்தது. ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த காலகட்டத்திலும் தனது தனித்துவத்தை இழக்காமல் தலை நிமிர்ந்து நிற்கின்றது. குறிப்பாக வடமாகணம் முழுதும் பல ஆழிவுகளில் இருந்து மீண்டும் மீண்டும் எழுந்து நின்று பல சாதனைகளை செய்து காட்டியுள்ளது.
இலங்கைதீவு முழுவதும் வாழும் ஒட்டு மொத்த மக்களும் இந்த வடக்கின் மீது ஒர் ஈர்ப்பினை கொண்டுள்ளார்கள் இதற் காணகாரணம் அந்த மண்ணின் தனித்துவமா மக்களின் தனித்துவமா? என்பதை சரியாக்குறிப்பிட முடியவில்லை.
இது இன்று மட்டுமல்ல ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் அதற்கு முன் வந்தவர்களின் ஆட்சிகாலத்திலும் யாழ்ப்பாணமும் அதன் பாரம்பரியமும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விட வித்தியாசமான வியக்கத்தக்க நிலையிலே காணப்பட்டது.
ஏனைய சமூகத்தின் எஜமான்களாகவே இந்த யாழ்ப்பாணத்தவர்கள் செயற்ப்பட்டார்கள். சேர்.பொன் இராமநாதன் போன்ற அறிவாளிகள் அன்றைய கால ஒட்டு மொத்த இலங்கைக்கும் நல்ல ஆலோசகராகவும் ஆங்கிலேய ஆட்சியாளர்களோடு சம அந்தஸ்துடன் பேசக்கூடியவர்களில் முக்கியமான ஒருவராகவும் காணப்பட்டார்.
இது போல இன்று பல விடையங்க்களை யாழ்மண்ணின் பெருமைக்கு உதாரணமாக கூற முடியும் கலை கலாசார பண்பாடு மட்டும் அல்ல வீரத்திலும் சிறந்தவர்களாகதம்மை வரலாற்றிலே பதிவு செய்துள்ளனர் இந்த யாழ்வாசிகளிடம் உலகில் ஜந்தாவது வல்லரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தியா தனது ஆக்கிரமிப்பு படைகள் யாழ் மண்ணில் வாங்கிய அடிகளை கனவிலும் மறக்காது. இப்படி பெருமைக்கு உரிய யாழ்ப்பாணம் இன்று போதைப் பொருளின் விநியோக மையமாகவும் கலாசார சீர்கேட்டின் முதன்மை பெற்றதாகவும் அடையாளப்படுத்தபடுத்தபடுகின்றது.
இது திட்டமிட்ட ஒரு பரப்புரை என்றே கூறலாம். யாழ் மண்ணின் பெருமைக்கு சேறு பூசும் ஒரு திட்டமிட்ட செயல் இதை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் கலாசாரத்தின் ஆணிவேராக ஆழமாக மண்ணில் வேரோடி இருக்கும் அந்த தனித்துவமான தேசத்தின்மீது மேற்கொள்ளப்படும் பொய்யான ஒரு பரப்புரையினால் அதன் எதிர்காலத்தை உண்மையிலேயே தாம் இன்று கூறுகின்றதைப் போல ஒரு இழிவான நிலைக்கு தள்ளிவிடுவதற்கான ஒரு திட்டமிடலே இது அண்மையில் கூட யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதபதி கூட யாழ்ப்பாணத்தில் இன்று அதிகமான போதை பாவனையாளர்கள் இருப்பதாக ஒரு கேலியான வகையில் தெரியப்படுத்தி இருந்தார். இது உண்மைக்கு புறம்பானது.
கண்டிக்க வேண்டியது. நாட்டின் தலைவர் என்ற வகையிலே போதைப்பொருள் பாவனையினையும் விநியோகத்தினையும் தடுக்க வேண்டிய பொறுப்பு உள்ள அவர் யாழ் மாவட்டமே மது பாவனையில் அதிக இலாபத்தை அரசுக்கு பெற்று கொடுக்கின்றது. ஜம்பதுக்கும் அதிகமான மதுபான நிலையங்க்கள் உள்ளன.
என்ற செய்தியினை தெரியப்படுத்தியிருந்தார் வடக்கில் மட்டும் இவ்வாறான மதுபான நிலையங்கள் இருக்கின்றமை அவருக்கு நன்கு தெரியும் என்றால் அவற்றுக்கு அனுமதி பத்திரங்க்களை வழங்கியது யார்? வடக்கு மக்களா? நிச்சயமாக மத்திய அரசினாலே இந்த அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கும்.
எனவே இவ்வறான அனுமதிகளை மற்ற மாகணங்களை விட வடக்கிற்கு மத்திய அரசுகொடுக்கின்றது என்றால் அதுவே வடக்கின் இன்றைய நிலைக்கு காரணம். எனவே பொறுப்பு கூற வேண்டிய இன்றைய நாட்டின் தலைவரே வடக்கில் அதிக போதை நோயாளிகள் உள்ளனர். என்று கூறுவது வடக்கு மக்களை இழிவுபடுத்துவதாகவே கருத வேண்டும்.
வடக்கில் மட்டும் அதிகளவிலான மது விற்பனை நிலையங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன. என்ற கோள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நாட்டின் தலைவர் மக்களைப் பார்த்து போதைப் பொருள் பாவனைக்கு எதிராக நீங்க்கள் போராடவில்லை என்று கேலி செய்வது ஒரு நாட்டின் தலைவர் என்றவகையில் பொருத்தமற்ற செயலாகும்.
இதை சுட்டிக்காட்டுவதற்கு தமிழர் தரப்பு தவறிவிட்டன. சரி வடக்கிலே இன்று அதிகமான போதை பொருள் பாவனை குற்றச்செயல்கள் கலாசாரசீர்கேடுகள் இன்று அதிகரித்து உள்ளதாக பலரும் பல இடங்க்களிலே பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
ஆனல் உண்மையிலே போதைப்பொருள் பாவனை என்பது மற்ற இடங்களை விட யாழ்ப்பாணத்தில் மட்டும் அதிகமாகி விட்டதா. நிச்சயமாக இல்லை. குடு ஹொரோயின் என்றால் இன்னும் என்ன என்றே வடக்கு மக்களுக்கு தெரியது. அபின் பாபுல் போன்ற இன்னும் பல போதை மருந்துகளை வடக்கு மக்கள் கண்ணால் கண்டது கூட இல்லை. அப்படியாயின் எதை ஆதாரமாக வைத்து இந்த குற்றச்சாட்டு வடக்கின் மீது சுமத்தப்படுகிறது. அதற்காண காரணம் என்ன?
கொழும்பிலே வாழ்ந்தவர்க்கும் அங்கே சுற்றி திரிந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும்? பல போதை நோயாளிகள் குடு கெரோயின் போன்ற போதை மருந்து கொள்வனவு தேவைக்காக வேரூந்துகளிளும் புகையிரதங்களிலும் பல கொள்ளை சம்பவங்க்களில் ஈடுபடுவார்கள். இந்த குடு என்பது மிகவும் மோசமான ஒரு போதை மருந்து இதற்காக பணம் கொடுக்க மறுத்த தன் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்யும் அளவு போதை நோயாளிகள் வடக்கில் இல்லை.
இவ்வாறான போதை மருந்து பாவனைகளுக்கும் வடக்கில் இல்லை. எனவே போதை பொருள் பாவனையில் வடக்கினை முதன்மை படுத்துவது பொருத்தமற்றது. சரி இந்த கலாசார சீர் கேடுகளுக்கும் குற்ற செயல்களுக்கும் வடக்கு முதல் இடம் வகிக்கிறதா?இந்த குற்றச்சாட்டுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும். இதுவும் ஒரு திட்டமிட்ட கறை பூசலே. வடக்கில் களியாட்ட நிலையங்கள் இல்லை சூதாட்ட நிலையங்கள் இல்லை. ஆனால் கொழும்பில் ஏனைய மாகாணங்களில் இவை அனைத்தும் தாராளமாக உள்ளன. தெகிவளை மிருககாட்சி சாலை விக்டோரியா பாக் வெளைவத்தை கடற்கரை ஒரம் என வெளிப்படையாகவே கலாசார சீர் கேடுகளும் குறிப்பாக விபச்சாரம் நடைபெறுகின்றன.
இதைவிட எமது தமிழ் பெண்கள் ஒட்கா வைன் போன்ற மதுபானங்களை உற்கொள்வதில்லை. அவர்களுக்கு இவை என்ன என்றே தெரியாது. ஆனால் ஏனைய இடங்களிலே குறிப்பாக கொழும்பிலே எத்தனை சிங்களப் பெண்கள் இவற்றை சாதாரனமாக குளிர்பானங்களை போல உற்கொள்கின்றார்கள்.
அனால் ஏன் இவற்றுக்கெல்லாம் வடக்கிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இதன் நோக்கம் என்ன? உண்மையிலே தற்போது வடக்கிலே போதைப் பொருள் பாவனை சற்று அதிகரித்து உள்ளது என்பது உண்மை. அதற்காக அது முதலிடத்தில் உள்ளது என்பதை ஏற்று கொள்ள முடியாது.
இங்கே ஒரு விடையத்தினை அவதானிக்க வேண்டும். இந்த போதைப்பொருள் மற்றும் கலாசார சீர்கேடு என அனைத்து சமூகவிரோத செயல்களும் இப்போதுதான் தலை தூக்கியுள்ளன. அதாவது இரண்டாயிரத்து ஒன்பது வைகாசி பதினெட்டுக்கு பின்பு. எனவே இதற்கான பொறுப்பு முழுவதும் மத்திய அரசாங்கமே விடுதலைப்புலிகள் காலத்தில் இல்லாத கஞ்சா கடத்தல்கள் இப்போது தீவிரமாக முன்னெடுக்க படுகின்றது.
என்றால் தவறு வடக்கினுடையதா? அல்லது அரசாங்க்கத்தினுடையதா? விடுதலை புலிகளின் காலத்திலே கடல் வழியாக கொண்டுவரப்படாத? கஞ்சா இப்போது அவர்கள் இல்லாத போது. கடல் வழியாக நடைபெறும் கஞ்சா கடத்தல் களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் இலங்கை கடற்படையும் இலங்கை அரசாங்க்கமுமே தவிர வடக்கு மக்கள் அல்ல. இன்று தலைதுக்கி உள்ள சமூகவிரோத செயல்காள் விடுதலைப்புலிகள் காலத்தில் இல்லை என்றால் இது அவர்களின் நல்லாட்சியினையே தெளிவுபடுத்துகிறது.
கலைகலாசாரம் பண்பாடு என அனைத்திலும் முதன்மைவகித்த வடக்கு இன்று போதைப்பொருள் பாவனையிலும்கலாசாரசீர்கேட்டிலும் குற்றச்செயல்களிலும் முதன்மைவகிக்கின்றது என்றால் இப்போதைய நிர்வாக ஆட்சிமுறை சட்ட ஒழுங்கு என அனைத்துமே சீரற்ற நிலையில் உள்ளது.
என்பதுதானே அர்த்தம் நல்லாட்சி என்று கூறப்படும் இன்றைய ஆட்சிமுறை தவறானது. என்பதுதானே அர்த்தம் எனவே வடக்கின் மீதும் அதன் தனித்துவம் மீதும் கறை பூசுவதைவிடுத்து விடுத்து ஒரு நல்ல சட்ட ஒழுங்கை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு எனவே இதை கருத்தில் கொள்ளாமல் கேலி பேசுவதும் இழிவுபடுத்துவதும் நல்ல ஆட்சியாளர்களுக்கு உகந்ததல்ல திட்டமிட்ட வகையிலே வடக்கில் இடம்பெறும் சமூகவிரோத செயல்களுக்கான முழு பொறுப்பும் இன்றைய ஆட்சியாளரையே சாரும் இதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்..
-http://www.tamilwin.com