தமிழர் சிறுபான்மை இனம் அல்ல ஐ.நாவில் ஒலித்த குரல்

இலங்கையின் வரலாற்றை கூர்ந்து கவனித்தால் தமிழர் சமூகத்திற்கு என்ன நேர்ந்துள்ளது என்பது புரிய வரும் என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் பக்க அறையில் இடம் பெற்று வரும் கூட்ட தொடரில் இலங்கை விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்ட போது அவர் இதனை கூறியுள்ளார்.

பெரும்பாலானவர்கள் சமீபகாலமாக கூறிவருவது தமிழ் சமூகம் இலங்கையில் சிறுபான்மையினர் என்று. ஆனால் தமிழ் சமூகம் ஒருபோதும் சிறுபான்மையினர் அல்ல. மாறாக அவர்கள் ஒரு தேசத்தினர்.

அவர்களுக்கான தனியாக மொழி, மதம், கலாச்சாரம் மட்டுமின்றி அவர்களுக்கென ஒரு பிரதேசமும் இருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்துடன் ஆட்சியாளர்களிடமும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன நேர்ந்தது என்றால் குறித்த தீர்மானத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி வெளிவிவகார அமைச்சுக்கு இது இரண்டிலும் இல்லாத புது கருத்தை முன்னெடுத்து செல்கிறார்.இதேவேளை, சரித்திர ரீதியில் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் தமிழர்கள் மீதான உரிமை மீறல் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: