பயங்கரவாத பட்டியலில் இருந்து புலிகளை நீக்க இலங்கை அனுமதிக்காது!

mangalaஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை அகற்றக்கூடாது என்பதற்காக இலங்கை அரசாங்கம், சாட்சியங்களை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, அண்மையில் நியூயோர்க்கில் வைத்து இதனை தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கப்பட்டியலில் ஏன் வைத்திருக்கவேண்டும் என்பதற்கான காரணத்தை இலங்கை சமர்ப்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உட்பட்ட பல நாடுகள் விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ளன. இந்தநிலையில் இலகுவதாக அந்த இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய பட்டியலில் இருந்து நீக்க இலங்கை அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2001 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த இயக்கம் பயங்கரவாத இயக்க பட்டியலில் இருந்து நீக்கப்படும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான தகவலை அடுத்தே இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: