ஈப்போ செசன்ஸ் நீதிமன்றம், ஶ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயச் சிலைகளை உடைத்துச் சேதப்படுத்தியதாகவும் கையில் தாக்குதல் ஆயுதமொன்றை ஏந்தியிருந்ததாகவும் குற்றஞ்சாட்ட 29வயது மருத்துவரை எதிர்வாதம் செய்யும்படி உத்தரவிட்டது.
டாக்டர் ஃபாத்தி முன்ஷிர் நட்ஸ்ரிக்கு எதிராகக் குற்றம் சுமத்த தேவையான ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதி இக்மால் ஹிஷாம் முகம்மட் தாஜுடின் கூறினார்.
இவ்வாண்டு ஏப்ரல் 24, மாலை ஐந்து மணியளவில் ஜாலான் ஹாஸ்பிடலில் உள்ள ஶ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயச் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதாக குற்றவியல் சட்டம் பிரிவு 205-இன் கீழ் டாக்டர் ஃபாத்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வழக்கு அக்டோபர் 17, 18-இல் விசாரணைக்கு வருவதாக நீதிபதி அறிவித்தார்.
இதிலிருந்து தெரிய வில்லையா எப்பேர் பட்ட மூடர்களை மருத்துவ படிப்புக்கு தெரிவு செய்துள்ளனர்? தோல் நிறம்– பார்த்தால் தரம் இருக்குமா?