தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா சிக்கனகூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் இதுவரை தீர்வுகாணப்படவில்லை.
அவர்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்ப்பதற்கு உடனடியாக முன்னுரிமை வழங்கவேண்டு எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.
அவர்களின் உடனடித் தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வுகாண வேண்டிய பாரிய பொறுப்பு வடமாகாண சபையிடமுள்ளது.
மக்கள் தமது பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.
தமிழ் மக்களுக்கான அரசியல் பிரச்சனைகளுக்கு இதுவரை தீர்வுகாணப்படவில்லை.
இவற்றை தீர்பதற்கான பணியை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்த்துகொள்ளவேண்டும்.
வடமாகாண சபை மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதைவிடுத்து வெறும் உணர்ச்சிபேச்சுகளால் நேரத்தை வீனடித்தால் தீர்வினை எட்டிவிடமுடியாது எனவும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கூறியுள்ளார்.
-http://www.tamilwin.com