மலையக மக்களின் அவலம் பாராளுமன்றை உலுப்பியது

sritharan-mpயாழ் மாவட்டத்தின் பணப்பயிராக காணப்படும் புகையிலை உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை நிறுத்தப்பட்டால் அதற்கான மாற்றுத்திட்டம் என்ன? உரிய நிவாரணம் வழங்கப்படுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

ஏற்றுமதி இறக்குமதி தொடர்பிலான விவாதத்திற்காக இன்று பாராளுமன்றம் ஒன்றுகூடியது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் வடக்கில் அதிகளவானவர்கள் புகையிலை உற்பத்தியினை நம்பியே வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். தற்போது அது நிறுத்தப்பட வேண்டும் என அறிவிருத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிறுத்தப்படுமானால் அதனை நம்பி வாழ்வாதாரத்தை சீர் செய்து கொண்டு வரும் மக்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வியை பாராளுமன்றத்தில் அவர் முன்வைத்தார்.

கூடிய விரைவில் இது தொடர்பில் முறையான எழுத்து மூலம் அறியத்தருவதாகவும் சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை மலையக மக்கள் தற்போது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள், 700 ரூபாய் கூட சம்பளம் பெற முடியாத கேவலமான நிலையில் மலையம் தற்போது உள்ளது.

இந்த நாட்டில் உரிமைக்காக போராடும் போது அது இனவாதமாக சித்தரிக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் 1000 ரூபாய் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானது அல்ல அதனைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத இக்கட்டான வாழ்வினை மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மலையக மக்கள் அடிமைகளாக கேவலமாகவே தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் அவர்களது அடிப்படை உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் சீ. சிறீதரன் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: