முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கில் இருந்து சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தாமும் இவ்வாறு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தை விட மேல் மாகாணத்தில் தான் அதிகமான தமிழ் மக்கள் இருக்கின்றனர், எனவே வடக்கில் சிங்கள மக்களுக்கு ஏற்படுத்தும் நிலையை இங்கு தமிழ் மக்களுக்கு ஏற்படுத்த முடியும்.
இருப்பினும் வடக்கு முதலமைச்சர் இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முழு ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.
மேலும் அரச கருமங்களில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவாதத்தை கடை பிடித்திருப்பதாகவும் மேல்மாகாண முதலமைச்சர் குற்றம் சட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் வடக்கில் இரகசியமான முறையில் இடம்பெற்றுவரும் பௌத்த கலாச்சார திணிப்புக்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக முதலமைச்சர் கருத்தினை வெளியிட்டு இருந்தார்.
முதல்வர் கருத்து தொடர்பில் தெற்கில் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளும், ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com