எழுக தமிழில் தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தென்னிலங்கை மனித உரிமைகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் கு.குருபரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
நிமல்கா பெனாண்டோ உட்பட தெற்கில் உள்ளவர்கள் எழுக தமிழில் பேரணியையும் சரி அங்கு உரையாற்றிய முதலமைச்சரின் உரையினையும் தீவிரவாத போக்கு உடையாதாக சித்தரிக்க விரும்புகிறார்கள். எழுக தமிழ் இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களது வெவ்வேறான போராட்டங்களின் கூட்டிணைவே ஆகும். எழுக தமிழில் முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் முதலில் தென்னிலங்கை மனித உரிமைகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும்.
நிமல்காவின் கருத்து அவரது தராதரத்திற்கு குறைவானது. எழுக தமிழ் தொடர்பில் சிங்கள இனவாத அமைப்பான பொதுபலசேனாவும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது, நிமல்காவும் வெளியிட்டுள்ளார். அவ்வாறாயின் இரு தரப்பினதும் சிந்தனைகளும் ஒன்றா எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
-http://www.athirvu.com