அரசாங்கத்துக்கு எதிர்ப்பு வெளியிடும் கூட்டமைப்பு – அடுத்தது என்ன..? கொழும்பு அரசியலில் பரபரப்பு

sumandran-mpஅரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் புதிய சட்டத்தில், சர்ச்சைக்குரிய சில பகுதிகள் நீக்கப்படாமல் உள்ளன.

எனவே, பழைய சட்டமே புதிய வடிவத்தில் வரக் கூடும் என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதனை எதிர்ப்பதாகவும் ஊடகம் ஒன்றுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்படும் புதிய சட்டம், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு சட்ட ஆணையம் ஆலோசனை கூறியிருக்கின்றது.

எனினும், இதுதொடர்பாக, பாதுகாப்புத் துறையிடம் ஆலோசனை நடத்திய அரசாங்கம், சட்ட ஆணையத்தின் ஆலோசனைகளை நிராகரித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் கடந்த 4ஆம் திகதி தாம் எழுப்பியபோது, நீதி அமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் எவரும் பதிலளிக்கவில்லை.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்படும் புதிய சட்டம், சர்வதேச விதிகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நிறைவேற்றிய தீர்மானம் தெரிவிக்கிறது.

இந்த தீர்மானத்தை மீறினால் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து அரசாங்கத்திற்கு சலுகைகள் கிடைக்காமல் போகும்.தற்போதுள்ள சட்டத்தின்படி, கால வரம்பின்றி ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க முடியும்.

மேலும், முதல்முறையாக காவல் துறையிடம் ஒருவர் அளிக்கும் தகவலையே ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக் கொள்ள முடியும். இவ்வாறான சர்ச்சைக்குரிய பகுதிகள், புதிய சட்டத்திலும் இடம்பெறக் கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட ஒருவரிடம் முதல்முறை விசாரணை நடத்தும்போதே, அவர் சட்ட உதவிகள் பெறுவதற்கு காவல் துறை அனுமதியளிக்க வேண்டும் என சுமந்திரன் விடுத்த கோரிக்கையை நீதி அமைச்சர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: