அண்மையில் யாழில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தமை அறிந்த விடயம் இதற்கான காரணம் எது என்ற வகையில் சிந்திக்கப்படவேண்டிய கட்டாய சூழல் இருக்கின்றது.
தென்னிலங்கையில் தற்போது வடக்கு முதல்வர் எழுகதமிழ் உரையின் போது கூறிய வார்த்தைகள் பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனை பாரிய எதிர்ப்பு சக்தியாக மாற்ற முயற்சித்த சூழ்ச்சிகள் அரசின் பாரா முகத்தினால் அடக்கப்பட்டது. இது சதி ஆலாசனையாளர்களுக்கு பேரிழப்பாகவே அமைந்தது.
மேலும் வடக்கு முதல்வரை தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டமை முறியடிக்கப்பட்டது.
அவரை கைது செய்வது நடக்காத காரியமாகிப்போனது என்றே கூறவேண்டும்.
இதனால் ஏற்கனவே வின்னேஸ்வரன் ஊடாக விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகி வருகின்றார்கள் என தென்னிலங்கையில் கூறப்பட்ட வார்த்தைகளுக்கு சிறிதளவாவது நம்பகதன்மையினையும் உண்மைத்தன்மையினையும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது அவசியமாகியது.
அதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தில் மீண்டும் விடுதலைப் புலிகள் தொடர்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் தலைவர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்தது போன்று மாயைகளை உருவாக்க சில சதியாளர்கள் முயற்சித்து வருகின்றார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறு விடுதலைப்புலிகளின் தலைவரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால் இரண்டு கருத்துகளை வலியுருத்த முடியும்,
ஒன்று ஏற்கனவே தென்னிலங்கை முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வடக்கு முதல்வருக்கு எதிராக முறைப்பாடுகளை மேலும் வலியுருத்த அல்லது வற்புறுத்த சான்றுகளை நிறுவி விட இலகுவாக இருக்கும்.
மற்றொரு பக்கம் நோக்கினால் இவ்வாறான சுவரொட்டிகள் மூலம் வடக்கில் மீண்டும் விடுதலைப்புலிகள் என்ற மாயையினை சித்தரித்துவிட்டால் வடக்கு மக்கள் கோருகின்ற இராணுவ முகாம்கள் அகற்றுதல் மற்றும் காணிகள் விடுவிப்பு போன்றவை நிறைவேற்றப்படாமல் இழுபறி நிலைக்கு தள்ளிவிட முடியும்.
இதேவேளை மற்றும் ஒரு தரப்பு குறித்த விடயம் மஹிந்த அணியினரால் ஏற்படுத்தப்பட்ட விடயம் என்றும் கூறிவருகின்றது. ஏற்கனவே நல்லாட்சி மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மையினை நாடு முழுவதும் ஏற்படுத்தி விட்டார்கள் அதற்கான மேலும் ஒரு படியே இது எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் குறித்த விடயம் அரசுக்கும், இலாபம் அதே சமயம் அரசுக்கு எதிரான சக்திகளுக்கும் இலாபம். ஆனாலும் இந்த விடயம் இத்துடன் நின்று விடாது இது ஒரு ஆரம்பமாகவே காணப்படும்.
தொடர்ந்தும் இவ்வாறு பதற்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டால் பாதிப்பு என்னவோ அப்பாவி பொது மக்களுக்கே.
அரசியல் இலாபங்களுக்காக செய்யப்படும் இவ்வாறான செயற்பாடுகளை கண்டறிந்து விஷக்கிருமிகள் ஆரம்பத்திலேயே நசுக்கப்படல் அவசியம் இல்லாவிடின் இவை ஒன்று திரண்டு மிகப்பெரிய பூதாகரமான அழிவுக்கு வழிவகுத்து விடும் என்றும் தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்து வருகின்றனர்.

-http://www.tamilwin.com