முன் வரிசைக்கு 10,000 ரூபா: இந்த நாதாரிகளுக்காகவா போராடினோம் ? வாயில் ஈ போகும் அளவு திறந்து கத்திய யாழ்ப்பாணத்தான் !

spbalaகடந்த 2 தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு எஸ்.பி பாலசுப்பிரமணியம் வந்திருந்தது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அறியாத விடையம் என்னவென்றால் ஏற்பாட்டாளர்கள் போட்ட டிக்கெட்டின் விலை தான். எஸ்.பி.பியை மற்றும் கங்கை அமரனை பார்க்க சனம் துள்ளிக் குதித்து வந்தது. சுமார் 5,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதாகவும். இதில் முன் வரிசைக்கு ரூபா 10,000 அறவிட்ட ஏற்பாடாளர்கள் 2ம் வரிசைக்கு 5,000 மூன்றாம் வரிசைக்கு 3,000 என்று ஒருவர் ஆசனத்திற்கும் காசை அறவிட்டு கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்துள்ளார்கள். பாட்டைக் கேட்ப்பதும் ரசிப்பதும் மனிதர்களின் இயல்பு. ஆனால் அதே மனித நேயம் உங்கள் மனதில் உள்ளதா ? தலைக்கு 10,000 ரூபா டிக்கெட் எடுத்து முன் வரிசையில் அமர்ந்த சில யாழ்பாணத்தான், எமது போராட்டத்தை மறந்தான். மாண்டு போன மக்களை மறந்தான். போராடி போராளிகளையும் மறந்தான்.

வன்னியில் மற்றும் கிழக்கில் எத்தனை ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள் ? எத்தனை ஆயிரம் அங்கவீனர்கள் இருக்கிறார்கள் ? எத்தனை நூறு போராளிகள் இருக்கிறார்கள். புற்று நோயால் பாதிக்கப்படும் அவர்கள் நிலை இவர்களுக்கு தெரியுமா ? இல்லை சோற்றுக்கு வழி இல்லாமல் தூக்கில் தொங்கிய போராளிகள் பற்றி இவர்கள் அறியவில்லையா ? ஒரு வேளை நல்ல சோறு சாப்பிடாமல் அல்லலுறும் மக்கள் பற்றி இவர்களுக்கு தெரியாதா ? இங்கே அள்ளிக் கொடுக்கும் காசில் ஒரு பகுதியையாவது இது நாள் வரை இவர்கள் கஷ்டப்பட்ட மக்களுக்கு கொடுத்திருக்கிறார்களா ? வெளிநாட்டில் இருந்து செல்லும் காசு. அதனை எடுத்து அள்ளிக் கொடுத்து பாலாவின் பாடல் கேட்டு குதூகலித்து. வாயைப் பிளந்து கத்தி கூச்சலிட்ட இனமே …

உன் சொந்த இனத்தை மறந்து நீ அனாதையாகி நிற்பதை உணர்ந்தாயா ? இல்லையே …. இவர்கள் விடுதலைக்காகவா நாம் போராடினோம் என்று இறந்த மாவீரர்களது ஆண்மா கேள்விகளை எழுப்பிக் கொண்டு உறைவிடத்தில் தவிக்கிறது. எப்போது வரும் எங்கள் தேசம் மேல் ஒரு பற்று ?

-http://www.athirvu.com

2016-10-10-11-12-15

TAGS: