இறுதி யுத்தத்தின் போது படுகாயமடைந்த யுவதிகளை முதலுதவி சிகிச்சையளிப்பதற்காக இராணுவத்தினர் உழவு இயந்திரத்தில் அழைத்துச் செல்லபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அப்பவி யுவதிகளின் நிலை என்ன..? என்பது இன்னமும் தெரியவில்லை என பெற்றோர்களும், உறவினர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த யுவதிகள் முள்ளிவாய்க்காலில் காயமடைந்த நிலையில் குண்டுகள, துப்பாக்கி வேட்டுக்கள் என அனைத்ததையும் கடந்து அவர்களை வட்டுவாகல்வரைக்கு பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இராணுவத்தினர் மனிதாபிமான செயற்பாட்டின் கீழ் அவர்களுக்கு முதலுதவிசிகிச்சை வழங்குவதாக கூறியுள்ள நிலையில், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இராணுவத்தினரிடம் கையளித்துள்ளனர்.
எனினும், தற்போது அவர்களின் நிலை என்ன..? அவர்கள் இப்போது எங்கே..? என்னும் கேள்வியுடன் சொல்லமுடியாத துயரத்தில் இருப்பதாக காணாமல் போனோரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தற்போதுள்ள இராணுவ அதிகாரிகள், புலனாய்வாளர்கள் மனிதாபிமானமுடையவர்கள் என்றால் தமது தேடலுக்கு பதில் தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-http://www.tamilwin.com