இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்… ஒரு நிமிடம்!
இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.
கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.
தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன?
*முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்!
எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாக &தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.
* தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக்ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல்கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.
* ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான்.
இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.
அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ பிழைக்க வந்தால், தான் காலூன்றியவுடன், தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!
*பெண்ணாசை
பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது
என்றாலும் கூட , தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம் அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் , பின்னால் வந்த குறு நில மன்னர்கள் , என்று பெண்ணாலும் அழகிய பெண்களை முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால் அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப் பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் . காலகாலமாக இதை மற்றவர்கள் பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.
* மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும், தங்கள் மொழி, இன உணர்வைக் காக்க, சாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின் குரல், தினசரி ‘அரிவராசனம்’பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால், தமிழனோ மத, சாதி உணர்வுகளுக்காக, தமிழ் உணர்வையும், தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.
இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால், தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள், புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முஸ்லிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது. வடக்கு மாகாணத் தமிழன், கிழக்கு மாகாணத் தமிழனை ‘மட்டக்களப்பான் மடையன்’ என்று சொல்லி& தாழ்ந்த ஜாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. அங்கும் இன உணர்வில்லை.
* தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால், தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.
* இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..? ஆங்கிலத்தில் பேசுவார்கள்!
நீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி!
* மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள்,தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள், தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள்,நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள், நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம்,மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன. அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு.க.,அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணி, தமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர், அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டே, தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.
* இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம்… காங்கிரஸ் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரஸும், சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபா பட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியான காங்கிரஸ் ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம். எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டு, கூட்டணி&எதிரணி என்று பாராமல் பிரதீபா பட்டீலை ஆதரிக்கிறேன்’’என்று சொன்னார்.
ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலை, அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்தி, பிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து,ஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.
* ஆந்திராவோ, கர்நாடகாவோ, கேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காக, ஒரு போராட்டம் நடந்தால், அரசாங்கம், அரசியல் தலைவர், ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும்,காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோ, நம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் தமிழ்நாட்டில்? நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு, சுடுநீரில் குளிப்பாட்டி,சொறிந்து விட்டு, சொடக்கெடுத்து, தலைவாழை இழைபோட்டு, உணவு ஊட்டி, பீடா மடித்துக்கொடுக்கும் தமிழக போலீஸ்…
தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காக, தமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.
* காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும், அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆனால், தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும்… அது பற்றிக் கவலைப்படாமல்,ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்…
தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….
பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.
-பொன். ரங்கன்
பொன்.ரங்கனார் அவர்களே! நன்றி! அதே போல உரூப்படுவதற்கு ஒரு பத்துக் காரணங்களையும் சொல்லிவிடுங்களேன்! எதற்குப் பாதி!
https://www.facebook.com/tamilnationality/photos/a.1031076660246827.1073741828.1030820220272471/1092335404120952/?type=3
தமிழ் தேசியம்
27 March ·
தமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள்
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்… ஒரு நிமிடம்!
சுருக்கமா…தன்னை அழிச்சிக்கின்னு வந்தவனை வழவச்சிக்கினா தலைவா.
தமிழன் உருப்படாததற்கு பத்து காரணங்கள் !! இது என்ன உருப்படாத ஒரு விமர்சனம் !! படுத்து கொண்டு ஏனைய காரி உமிழ்கிறீர்கள் !! உமது எழுத்தை விமர்சிக்கும் அளவிற்கு எமக்கு தமிழ் பற்றும் இல்லை ! தமிழுக்கு சேவை செய்யவும் இல்லை ! தமிழர்கள் உறுப்படுவதற்கு வழி காட்டவும் தகுதி இல்லை !! தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழனுக்காகவும் ! தமிழ் நாட்டிற்க்காகவும் போராட வேண்டிய நீர் மலையகத்தில் மரியாதையோடும் ! சிறப்புடன் வாழும் தமிழர்கள் மத்தியில் மலையகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர் என்பது விளங்க வில்லை !! செம்பருத்தி ஆசிரியருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் !! இந்தியர்கள் என்று ஒற்றுமையுடன் வாழும் மலேசியர்களை , ஜாதி ,மதம் ,இனம் என்று வேற்றுமை படுத்த முயலும் இப்படி பட்ட தரமற்ற எழுத்துக்களை தவிர்க்க வேண்டுமென்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் !! படிப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது !! நாம் மானம் உள்ள மலையக தமிழனாக வாழுவோம் !! தெலுங்கர் ! மலையாளி ! சீக்கியர் ! கிறிஸ்துவன் ! முஸ்லீம் ! என்ற பாகுபாடு நமக்கு தேவை இல்லை ! விவேகானந்தர் உறைத்தது போல், சகோதர ,சகோதரி களாக ஒன்று பட்டு வாழ்வோம் !!
தெய்வ குத்தம் பொன் ரங்கன்! தமிழன் இழந்ததை கனவிலே கூட நினைத்து பார்க்க கூடாது! ஆ..சாமி கண்ண குத்திரும்!!!
ஒட்டுமொத்த தமிழர்களின் கனவிற்கான முதல்படி
” தமிழர் வணிக தேசிய முதலீட்டகம் ”
http://www.maavelcourier.com/
www.maavelplus.com
www.maavel.com
http://www.maavelcourier.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
திரு. பொன் ரங்கன் கூற்று உண்மையானவை என்னை கேட்டால் அவரின் கருத்துக்கள் இங்கேயும் நமது நாட்டுக்கும் பொருந்தும். திரு. எஸ். மணியம் செம்பருத்திக்கு புத்தி சொல்வது போல உள்ளது. ஒரு தெலுங்கன் என். நண்பன் சத தமிழன் தமிழன் என்று கூறி தமிழனை மட்டம் தட்டி பேசுவது வாடிக்கை. அதுவும் தமிழனை மட்டம் தட்டி கோலாக பேசி வந்தார். ஆனால் எனக்கு தெரியது அவர் ஒரு தெலுங்கன் என்று. பின்னால் புரிந்து கொண்டேன் அவர் ஒரு தீவிர தெலுங்கன் பக்தன் என்று. நாம் தமிழன்கள் இன்று விழித்துக் கொள்ள வில்லை என்றால் வரும் காலத்தில் நாம் நம் தமிழன் சமுதாயம் ஒரு கேள்வி கூரியாக மாறிவிடும். இன்று தெலுங்கர்கள் எதோ ஒரு வைகையில் மறைமுகமாக முனேறி வருகிறார்கள் இந்த நாட்டில் என்பது உண்மையிலும் உண்மை. நாம் தமிழன்கள் ஒற்றுமையாக வாழ கற்று கொள்ள வேண்டும்.
ம்ம்ம்ம்…. தவறான கட்டுரை. வேண்டுமென்றே தமிழரையும் சகா இந்தியர்களையும் மனம் கசக்க வைக்கும் நோக்கத்தை தவிர இந்த இந வெறி கட்டுரை கூறவில்லை.
…………………………தமிழன் உருப்படாததற்கு பத்து காரணங்கள் வேண்டாம் !! இந்த ஒரு காரணம் போதும் !! வெள்ளையன் தமிழனை இந்த நாட்டிற்கு சுலபமாக கொண்டு வருவதற்கு பயன் படுத்திய சுலபமான வழி தமிழனின் ஒற்றுமை இன்மை !! ஜாதி பிரிவினை !! அடுத்தவனை குறை கூறும் முன் உமது தமிழனை கொஞ்சமாவது மாணமுள்ளவனாக மாற்ற முடியுமா என்று பாரும் !! தமிழனிடம் திருடியவனும் தமிழன் தான் !! தெலுங்கனோ ! மலையளியோ ! சீக்கியனோ !! யாழ்பாணத்தானோ !! கிடையாது !! உங்கள் தமிழன்தான் !! கள்ள தமிழன் !!
செம்பருத்திக்கு
புத்தி சொல்லும் அளவிற்கு நான் பெரிய மனிதன் கிடையாது ! பல மலையாளிகளும் , தெலுங்கர்களும் தமிழ் பள்ளியில் கல்வி பயின்று தமிழ் வளர்ச்சிக்காகவும் ! இந்திய சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்ததை பார்த்திருக்கிறேன் ! நான் பழகிய தெலுங்கரும் ! மலையாளியும் ! ஏன் யாழ்பாணத்தானும் ! பிராமணனும் ! எந்த பேதமும் இன்றி தான் பழகி வந்தோம் ! மற்றவரிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியம் ! எதற்கெடுத்தாலும் ஜாதி ! மதம் ! இனம் ! என்று பேதம் பேசி கொண்டிருந்தாள் !தமிழன் உருப்படாமல் போவதற்கு மற்றவர்களை குறை கூறி கொண்டு இருக்க வேண்டியதுதான் ! கிருஸ்தவன் தேவாலயங்களில் தமிழ் ஆராதனை செய்கிறான் ! இந்து கோவிலில் தமிழுக்கு இடமில்லை ஆணால் தமிழ் கடவுள் !! செட்டியார்களும் ! யாழ்பாணத்தானும் ! கோவிலுக்கு தன் வருமானத்தில் செலவு செய்கிறான் ! தமிழன் கடவுள் பெயரை சொல்லி திருடி தின்கிறான் ! அரசாங்கம் தரும் தமிழ் பள்ளி மானியத்திலும் க்கை வைக்கிறான் !! எதுவெல்லாம் தமிழன் உருப்படும் வழிகளா ! பி .பி .நாராயணன் என்ற மலையாளி தோட்டத்து தமிழனுக்காக பாடு பட வில்லையா ! அரசாங்கம் அறிவாளி என்று அங்கீகரித்த பத்மநாதன் என்ற மலையாளி தமிழருக்காக உதவிகள் செய்ய வில்லையா ! தமிழன் அவர்களின் திறமைக்கும் , அறிவிற்கும் , ஈடு கொடுத்து முன்னேற முடியவில்லை என்றால் ! முன்னேறுபவனை குறை கூறுவதில் எந்த நியாயமும் கிடையாது ! எதோ எழுதுகிறோம் என்று எழுத கூடாது ! பேணா முனை கூறிய வாள் என்றான் ஒரு மா பெரும் எழுத்தாளன் ! உங்கள் எழுத்து இங்கு ஒற்றுமையுடன் ! இந்து வாக ! இந்தியனாக வாழும் சமுதாயத்தை பிரித்து விடாமல் இருந்தால் மகிழ்ச்சி !!
தமிழன் உருப்படாததற்கு பதினோறாவது காரணம் தமிழை தமிழனே மதிக்காததுதான். உதாரணம் மேலே உள்ள வரைபடத்தில் உள்ள எழுத்துக்களை பாருங்கள். தமிழனை குறை கூறி எழுதுவதோ தமிழில் வரைப்படத்தில் எழுதுவதோ பிரிட்டிஷ் இங்கிலிஷ். நல்லா இருக்குடா உங்களுடைய தமிழ் பற்று.
smaniam உங்கள் எழுத்தை மதிக்கிறேன். பி.பி.நாராயணின் வாரிசாக இப்போதும் ஒரு மலையாளி தான் இருக்கிறார். தவறில்லை. கு.பத்மநாபன் செய்த மாபெரும் காரியம் BSN ல் மலையாளிகளை நிரப்பிவிட்டுப் போனார். தவறில்லை! ஆனால் நமது தமிழன் இருந்தானே அவன் பெயரைச் சொல்ல யாரை விட்டுப் போனான்? நம்மிடம் இல்லாதது அவர்களிடம் இருக்கிறது. வேறு என்ன சொல்ல?
தமிழர்களை ஏமாற்றி திரிந்த, திரிந்து கொண்டிருக்கும் , திரியப்போகும் சாமி வேலையும் அவர் மகனையும் அவர் குடும்பத்தையும் , ‘தமிழர்களை காப்பாத்துறனே பேர்விழி’ என்று திரியும் மா இ காவையைம் ஒழித்தால் போதும். ஹிண்ட்ராப் புரட்சிக்கு பின் ஒற்றுமையின் அவசியம் புரிகிறது தமிழர்களுக்கும் மற்றும் இந்தியர்களுக்கும். அவர்களெல்லாம் (மா இ கா) ஊரையே அடிச்சி ஒலையில போடும்போது இந்த போன் ரங்கன் என்ன குச்சி மிட்டாய் சப்பி கொண்டிருந்தாரா, திடீர் என்று 60 வயத்துல ஞான பொறக்க…. ?
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ,சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லிலும் நம் இனத்தின் ஒற்றுமை வெளிப்பட வேண்டும் .நம்மில் வேற்றுமை எதுவும் இல்லை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் .உணர்ச்சி பூர்வமான வார்த்தைகளைவிட அறிவுபூர்வமான செயல்கள் நம்மை முன்னெடுத்து செல்லும்
தமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்களை கூறிய பொன் ரங்கனே, நமது வாசகர்களின் கருத்துக்களையும் சேர்த்து 12 காரணங்கள் என திருத்தி கொள்ளுங்கள்.
11-வது காரணம் :
தமிழை தமிழனே மதிக்காததுதான்.
(உதாரணம் மேலே உள்ள வரைபடத்தில் உள்ள எழுத்துக்கள்)
12-வது காரணம் :
தமிழன் மற்ற இன இந்தியர்களின் திறமைக்கும் , அறிவிற்கும் , ஈடு கொடுத்து முன்னேற முடியவில்லை என்றால் முன்னேறுபவனை குறை கூறுவது.
எப்படி ஐயா இப்படி கோணபுத்தியில் தமிழனை பற்றி கேவலமா எழுதுகிறிர்கள் எனக்கு தெரியவில்லை காரணம் இங்கு நமது நாட்டில் ஒரு தமிழன் 2 டாவது இடத்தில் இருக்கும் பெரிய பணக்காரன். பார்க்க போனால் அவர்தான் முதல் பணக்காரன் இந்த நாட்டில். நாம் என்ன செய்வது ஒட்டு மொத்தமாக ஒரு தமிழன் எல்லா வற்றையும் எடுத்து சாப்பிட்டு விட்டான் ஒரு மகா மடையன் சாதனை தலைவன் அவன் மகா தமிழன். இப்போ இருக்கும் ஒரு அரசியல் தலைவன் நினைத்தாள் அவன் கைவசம் வைத்து இருக்கும் ஒரு சில பெரிய நிருவனங்களை அவனிடம் இருந்து பிடுங்கி எடுக்களாம் செய்வான்கள நாதாரி பயலுங்க. நாம் தான் பேசிகொள்கிறோம் அவன்களை பற்றி ஆனால் அவன்கள் அரசியல் வாதிகள் வெட்கம் மானம் ரோஷம் எல்லாம் கிடையாது. நாம் மலையாளி தெலுங்கன் வங்காளி இவர்களை பேச வேண்டாம். அவர்கள் அமைதியாக முன்னேறி வருகிறார்கள். ஒற்றுமையை நாம் யோசிக்க வேண்டும். இதற்கு காலம்தான் பதில்கள் சொல்ல வேண்டும்.
நான் நினைக்கிறேன் இந்த பொன் ரங்கன், UMNO ஆளுனு. இப்படித்தான் ஹிண்ட்ராப் வளர கூடாதுனு அரசாங்கம் பகையை முட்டி பிரிச்சி விட்டுச்சு. அதில சிலரை எதிர் கட்சி தன் பக்கம் இழுத்துக்கிச்சி. தனேந்திரனுக்கு கட்சியும் டத்தோ படத்தையும் கொடுத்து, மக்களுக்காக போராட வருபவன், சுய இன்பத்திற்க்காக விலை போவான் என்று நமக்கெல்லாம் கண்ணபிக்க… இங்கேய தான் நாம் சூழ்ச்சியை புரியாமல் ஒற்றுமையை இழந்தோம் ……
இழந்த உரிமைகளை,உடமைகளை மீட்க போராடும் தமிழர் இனத்தின் குரல் இது…இதற்கு என் இத்தனை ஊளை ?
தமிழ்மொழி ,தமிழ்ககலை, கலாச்சார, பண்பாடுகளை ,நாகரீகத்தை ,தமிழ் இலக்கியத் தொன்மை ,தமிழ் இதிகாசங்கள் ,தமிழ் சமயயம் இவைகளை பற்றி பெருமை பேச தனித்தமிழனா தமிழ்ப்படித்த தமிழனை தவிர வேற யாருக்கும் யோகியதை கிடையாது என்று சொல்ல வருகிறேன். தமிழ்ப்படித்த இதரவர்கள், அந்நியன் திராவிடன், இந்துத்துதுவா,பிராமணன் எல்லாம் தமிழுக்கும் தமிழர் இனத்துக்கும் துரோகிகள் என்று சொல்ல வருகிறேன்.
தமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் என்றாலும் கேள்வி கேற்பீர்கள்..தமிழன் நல்லவன் என்று 5 காரணம் கொடுத்தாலும் பொன் ரங்கன் கோளாறு என்று கேற்பீர்கள்.
நான் அம்னோவில் இருந்தால் என்ன ம இ காவில் அல்லது பாஸ் அல்லது புதுசா ப்ரீபெர்சத்துவுல இருந்தா என்ன? தமிழனுக்கு ஊ யாச்சி அரசியல் பொருளாதார உதவி செய்ய ஆசைப்படுறேன்.
பஜேட்ல 4. 6 பில்லியன் தொழில் திறன் கல்விக்கு பிரதமர் ஒதுக்கி உள்ளார் நீங்கள் எவராவது பங்கெடுக்க முனைத்துள்ளீர்களா ?
அடுப்புல படுத்துகிட்டு ஊதாங்கோளு சுடுதுனு ஊதாம இருந்தா பருப்பு வேகாது. கஞ்சிதான் காயும்.
தமிழ் பாலர் பள்ளிக்கு 5 கோடி அப்படினா 50 மில்லியன் இன்னும் விளங்கலையா ஒரு கோடி பத்து மில்லியன்.ஒரு மில்லியன் என்பது பத்து லச்சம். இதெல்லாம் தமிழனா எழுதி கேக்க போறான் இல்லை என்பேன் . தெலுங்கனும் மலையாளியும் வங்காளியும் எழுதி தமிழ்ப்பள்ளிக்கு கொடுப்பான். ஆமாம் எத்தனை தமிழ்ப்பள்ளியில் தமிழன் தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார்கள் என்ற நினைப்பில் உள்ளீர்கள்?
பன்னாட்டு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடக்குது எத்தனை தமிழர் இன தமிழாசிரியர்கள் போய் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? தமிழன் உருப்படுவானா என்ற ஆய்வை செய்து பாருங்கள்.
இதறவன் திறமையாக இருக்கான். நாமில்லை என்றால் பொது உத்வேகம் வீசுது ? அரசு உயர்பதவியில் ,,,கல்வி இலாகாவில் ….கல்வி அமைச்சில் …பிற அமைச்சில்…மின்னல் பண்பலையில் ….அஸ்ட்ரோவில் …thr ராகாவில் ….பிரஜா உரிமைஆபீஸில் …எத்தனை தமிழன் இருக்கான் …? உருப்பட மாட்டான் என்றால்
மாறுவோம் உறுபடுவோம் என்பதற்கு எழுதுகிறறோம் !
இன்று ஆசிரியர் துறையில் படித்து இனம் காரணமாக வேலை கிடைக்காத தமிழர் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேரு?
வறுமையின் பிடியில் நான்கு ஆண்டுகள் ஆசிரியருக்கு படித்து சூப்பர் மார்க்கெட்டில் விலை பட்டியல் போடும் அப்பாவி தமிழ் பெண்களை பார்க்க வேண்டுமா ? காலை பத்து மணிக்கு போய் இரவு 10 மணிக்கு பஸ் ஏறி வீட்டுக்கு 11 மணிக்கும் 12 மணிக்கும் போய் சேரும் நமது இளம் தமிழ் சகோதிரிகளிடம் கேளுங்கள். கோலா லம்பூருக்கு வந்து கோலா சிலங்குருக்கு தினம் பயணப்படும் பெண்களை கேளுங்கள் …தமிழன் உருப்பட்ட்து போதும்.
நன்றி சொல்லக்கூட நா கூசுது ! வீரியம் பேசும் மதிமயங்கிகள் மந்திகள் போல தாவ வேண்டாம் !!
திரு. பொன் ரங்கன் உங்கள் கூற்று உண்மைதான் இல்லை என்று நான் சொல்லவில்லை. உங்களின் கோபம் வேகம் எல்லாம் முன்பு முப்பது ஆண்டுகளுக்கு இருந்து இருந்தால் நம் சமுதாயம் எங்கேயே போயிருக்கும். ஒருவன் திட்டம் போட்டான் தமிழர்களை ஆகாய உச்சியில் சேர்க்க போகிறேன் என்று கலை முதல் இரவு படுக்கும் வரை பேசினானே அயோக்கிய நாய். அப்போ நாம் என்ன செய்தோம் என்னையும் சேர்த்து. நான் எந்த அரசியலிலும் இல்லை அதனால் பேசமுடியவில்லை காரணம் என் வருமானம் எனக்கு திருப்தியாக இருந்தமையால். அடுத்து அன்று இருந்த அவனுக்கு அடுத்து தலைவன் இன்று உடல் நல குறைவால் முடியாமல் உள்ளார். அவரும் என்ன செய்தார் பல முறை அவனுடன் சண்டை போட்டு பிறகு கைக்கோர்த்த கதைகள் ஏராளம். இன்று நீங்கள் பெரியதாக கூக்குரல் இடுகிரிர் என்ன புண்ணியம். வயதான பிறகு நாம் பேசினால் கேட்கவா போகிறான்கள் நாய்கள் பயல்கள். ம்ம் என்னை கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். நீங்கள் எழுதியதை அப்படியே மறுபடியும் படிது பார்க்கவும். உண்மையான ஒரு தகவல் நீங்கள் சொன்னது. இப்போ இருக்கும் நமது துணை கல்வி அமைச்சர் இந்த பிரச்சனைக்கு சீர் செய்ய முடியாத என்ன. அவரின் பேச்சு கேட்க சில சமயம் வேடிக்கையாகவும் உள்ளது. தான தலைவன் கீழ் இருக்கும் மகா மடையன்கள் மறுபடியும் மறுபடியும் அவனைப்போல் பணம் பணம் என்று குறிக்கோளாக இருந்தால் என்ன செய்வது. உங்களின் விடா முயற்சி வெற்றி அடைய வாழ்துகிறேன். அடுத்து செம்பருத்திக்கு என் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். எங்களை போன்றோர் மனம் வேதனைகளை உங்கள் மூலமாக பயன் படுத்திகொள்கிறோம். (வறுமையின் பிடியில் நான்கு ஆண்டுகள் ஆசிரியருக்கு படித்து சூப்பர் மார்க்கெட்டில் விலை பட்டியல் போடும் அப்பாவி தமிழ் பெண்களை பார்க்க வேண்டுமா ? காலை பத்து மணிக்கு போய் இரவு 10 மணிக்கு பஸ் ஏறி வீட்டுக்கு 11 மணிக்கும் 12 மணிக்கும் போய் சேரும் நமது இளம் தமிழ் சகோதிரிகளிடம் கேளுங்கள். கோலா லம்பூருக்கு வந்து கோலா சிலங்குருக்கு தினம் பயணப்படும் பெண்களை கேளுங்கள் …தமிழன் உருப்பட்ட்து போதும்.) மனம் அழுகிறது.
வணக்கம் திரு ஜி மோகன் ஐயா ! கட்சிகளை நாம் குறை சொல்லி பயனில்லை. ஆனால் கட்சிக்குள் கட்சி நடத்தி பதவிக்கும் பகட்டுக்கும் பிழைப்புக்கு தலைவர்களை அம்மாம் சாமி போட்டு கெடுத்த கொடூரம்தான் இந்த இனம் அனுபவிக்கும் விதி. இந்த சில்லரைபுத்தி எல்லா கட்சியிலும் உண்டு. அரசியல் அது ஒரு ராஜாங்கம் சரியாக பயன்படுத்தா விட்டால் கூஜாங்கமாகி சமுத்தாயத்தை சீரழித்து விடும் அதுதான் கடந்த 30 ஆண்டுகளாக நடந்தது. நடக்கிறது. இண்டியனில் 89 % தமிழர்கள் இருந்தும் வாழத்தெரியாத கூட்டத்தை உருப்படாதா கூட்டம் என்றால் மீதமுள்ள 11% பேர்தான் அரசியல் ஆளுமையில் திட்டமிட்டே குழி வெட்டினான். தமிழன் அவர்களை பொறுத்தவரை ரொம்ப நல்லவன் இது ஒட்டுக்கும் பதவிக்கும் அரசியல் வேதாந்தம்.
இன்று நான் ஒரு பள்ளியில் LPS துணைத்தலைவராக இருந்தும் 4 ஆசிரியர்கள் தேவை ஆனால் தலைமை ஆசிரியரால் பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை. காரணம் KPM அனுமதி தரமறுக்குதாம். தற்காலிக ஆசிரியர்களை ஓட்ட பழகிப்போன சோம்பேறித்தனம்தான் காரணம். LPS சுக்கு இதில் தலையிட முடியாதாம். PIBG யும் தூங்கி வழிகிறது. பாதிப்பு இனத்து மாணவர்கள்தான். அதையும் மீறினால் கோரிக்கை விடும் பெற்றோர்கள் அவர்களின் மாணவர்கள் பாடத்தில் இருட்டடிப்பு. உருப்படுமா இந்த இனம் என்று பொறுப்பாளர்களை நோக்கிய கேவலம்தான் என் கேள்வி ?தெய்வீகமான ஆசிரியர் தொழிலில் கூட இப்போதெல்லாம் கிராக்கி கௌரவ மயிறு மந்தைகள் அதிகம்.
“இண்டியனில் 89 % தமிழர்கள் இருந்தும் வாழத்தெரியாத கூட்டத்தை உருப்படாதா கூட்டம் என்றால் மீதமுள்ள 11% பேர்தான் அரசியல் ஆளுமையில் திட்டமிட்டே குழி வெட்டினான்.” என்று பொன் ரங்கன் எழுதி உள்ளது, அவரின் 60 வயது குணத்தை காண்பிக்கிறது … பலமுறை சொல்லியும்: இந்தியர்களின் இன்றைய நிலைக்கு சாமி வேலுவும் மா இ கா வும் தான் காரணம் என்றால் , இவர் தமிழ் பள்ளிகளில் நிகழும் உடப்பூசலை பேசுகிறார். ஒட்டு மொத்த 888 தமிழ் பள்ளிகளை 523 காக ஆக்கும் பொழுது 89% தமிழர்களும் , தமிழர்கள் சார்ந்த தலைவர்களும் , தானை தலைவரும் அவர் தம் தவ புதல்வரும், நீங்களும், ஏன் இவ்வளவு ? மற்ற தமிழ் பள்ளி ஆசிரியர்களும் என்றாவது ஒருநாள் போராடி இருப்பீர்களா ? HINDRAF என்ற இயக்கம் (உதய குமார் , வேதமூர்த்தி ,கங்காதரன், வசந்தகுமார் (தமிழர்கள்)), மனோகரன் மலையாளம் (மலையாளம்), கணபதி ராவ் (தெலுங்கு) இவர்களுடன் எதிர் கட்சி தலைவர் DAP YB .குலாசேகரன் (தமிழர்) அவர்களும் , முழு மூச்சாக எதிர்த்தார்கள் . பாவம் இவர்கள், நல்லவர்களை பசி பல பாதைகளில் கொண்டு செல்கிறது. HINDRAF போராளிகள் உங்களை போன்ற சுகவாசிகள் அல்ல திரு பொன் ரங்கன் அவர்களே ….
அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் சிந்திப்போம் ,ஆண்டுக்கு ஒருமுறை தமிழர் ஒற்றுமை தினம் என கூடுவோம் /நம்மில் வரியவர் துயர் துடைக்க செயல்படுவோம் .தனிமனிதனை விட கூட்டு முயற்சி வெற்றியை தரும் .இங்கு சுயநல வாதி களுக்கு இடம் இல்லை
iraama thanneermalai சார் நம்மிடம் இருக்கும் பணத்தை எடுத்து நாமே உதவி கொண்டால், அரசாங்கம் அதையே செய்யுங்கள் என்று சொல்லும், வரும் காலத்தில் அதுவே கலாச்சாரமாகும். எனவே தாங்கள் நல் எண்ணம் போற்றக்கூடியதாக இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக உங்கள் வாதங்களை பின் தள்ளுவதை தவிர வேறு வழியில்லை ….
தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை குறைய நான் நேரில் கண்ட சில உண்மைகள்… இவ்வளவு ஒத்துமையா இருக்கும் இண்டியன்கள் ஏன் தமிழ் பள்ளிகளுக்கு ஒரே குரல் கொடுக்கவில்லை? இடைநிலை பள்ளியில் PTA கூட்டத்துக்கு சென்றிருந்த பொது தமிழர் அல்லாதவர் வாயில் இருந்து வந்த சில வரிகள்….Cikgu my mother tongue is not Tamil,we are not in favour of Tamil language classes in the school…and we are not sending our children to such classes! முக்கியமானதை மறந்து விட்டார்கள் அந்த பெற்றோர்கள்…தமிழ் மொழி இல்லையேல் அவர்கள் தாய் மொழியும் அழிந்து விடும் என்பதை…
ஒருவர் செய்யும் காரியத்திற்கு நீங்கள், George டப்பாங்குத்து அவர்களே, நீங்கள் ஒரு இந்திய பிரிவினர் மீது பழி போடுவீர்களேயானால் … ஒரு குடிகாரன் செய்யும் சேட்டைகளுக்கு உங்கள் மீது ஏன் பழி போடக்கூடாது ?
திரு. திலீப் அவர்களுக்கு, உங்களின் கேள்வி திரு. பொன் ரங்கன் நோக்கியே உள்ளது சிறிதளவும் யோசிக்காமல் எழுதுவது உங்கள் சிறு பிள்ளை தனத்தை காட்டுகிறது. முதலில் திரு. பொன் ரங்கன் என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்க்க வேண்டும். பிறகு உங்கள் கருதை சரியாக எடுத்து வைக்கவேண்டும். சும்மா செம்பருத்தியில் எழுதுகிறோம் என்று நினைத்து கரடு முரடாக வார்தைகளை அடுக்க கூடாது. திரு. பொன் ரங்கன் புள்ளி விவரம்மாக தன் கருதை எடுத்து வைக்கிறார். அடுத்து உங்களின் கருத்து 1. என்னவென்றால் அவரின் 60 வயது குணத்தை காண்பிக்கிறது 2. மற்ற தமிழ் பள்ளி ஆசிரியர்களும் என்றாவது ஒருநாள் போராடி இருப்பீர்களா 3. ஒட்டு மொத்த 888 தமிழ் பள்ளிகளை 523 காக ஆக்கும் பொழுது 89% தமிழர்களும் , தமிழர்கள் சார்ந்த தலைவர்களும் என்று கேட்டு உள்ளிர்கள் சரிதான் உண்மைதான் யார் இல்லை என்று சொன்னது. எனக்கு விவரம் தெரிந்தவரை என்ன செய்வது இந்த அரசாங்கத்தை. ஒருவர் அரசாங்க வேலையில் உள்ளவர் அரசாங்கத்தை எதிர்து போராட முடியுமா ?. அரங்கத்திற்கு எதிர்ப்பாக குரல் கொடுக்க முடியுமா ? நீங்கள் சிந்திக்கவும். ஏன் இன்று கூட பெர்சே கூட்டத்தில் அரசாங்க வேலையில் உள்ளவர்கள் கலந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை நிச்சயம் என்று அறிக்கை விடுகிறார்கள். அதையும் தாண்டி ஒருவர் அறிக்கை விடுகிறார் என்றால் நாம் அவரை பராட்ட வேண்டும்மே தவிர அவருக்கு புங்கொத்து கொடுது புகழ்ல வேண்டாம் என்று நான் நினைக்கிறன் அவரும் அதை எதிர்பார்க்க வில்லை. என் கருத்து. இது எல்லா அரசாங்க தொழிலாலருக்கும் தெரியும் என்றும் நினைக்கிறன். நீங்கள் மற்ற எதிர்கட்சி தலைவர்களை நினைவு படுத்த வேண்டாம் எல்லோரும் சுயநலவாதிகள். தேர்தல் சமயத்தில் போர் கோடி எழுபவர்கள். திரு. உதயகுமார் தவிர்து நல்ல மனிதர் ஆளையே காணோம்
“திரு. பொன் ரங்கன் புள்ளி விவரம்மாக தன் கருதை எடுத்து வைக்கிறார்.” என்று ஜி.மோகன் – கிள்ளான் எழுதி உள்ளீர்கள். எனக்கு அப்படி தெரிய வில்லை சார் காரணம் அவர் எந்த புள்ளியில் ஆரம்பித்தாலும், கடைசியில் இந்தியர்களின் ஒரு குறிப்பிடட பிரிவினரால்தான் தமிழன் இன்று இப்படி இருக்கிறான் என்று முடிப்பர். அவர் என்றுமே தமிழர்களின் ஒட்டு மொத்த சொத்துடைமையையும் கொள்ளை அடித்த சாமி வேலு என்ற ஒரு தமிழனை குறை கூறியதே இல்லை …. அரசாங்கம் ஒவ்வொருமுறையும் மானியங்களை குறைக்கும் பொழுது, அதற்கு ஒத்து ஊதும் மா இ கா தலைவர்களை கண்டித்ததில்லை. அப்படியே விமர்சித்தாலும் மேலோட்ட்மாக விமர்சித்து , வேறு ஒரு இந்திய பிரிவினரின் தலையில் இறங்கி விடுவார்….. மேலும் என்ன நடந்தாலும் உடனே திராவிடன், தெலுங்கன், மலையாளீ , இன்னும் சில வர்கத்தை சேர்ந்தவர்களானால்தான் தமிழன் இப்படி இருக்கிறான் என்பார். மறந்தும் கூட அரசாங்கத்தை கேள்வி கேட்கமாடடார். இதில் எதிர் கட்சிக்கும் ஜால்ரா வேறு போடுவார். எங்காவது பிரச்சனையென்றால் ஒரு குறிப்பிடட மக்கள் பிரிவை சாடுவார். இதில் என்ன இருக்கிறது புள்ளி விவரம். மாமியார் சட்டியை உடைத்தாலும், அல்லது மாமனார் உடைத்தாலும், அதுவாகவே விழுந்து உடைந்தாலும் மருமகளை குற்றம் சொல்வார். உங்கள் பாஷயில் சொன்னால், புள்ளி விவரமாக. முதலில் மா இ கா வில் இருந்தார் . பிறகு பக்காதானில் இருந்தார். எங்கும் பருப்பு வேக வில்லை என்றதும் தனி தமிழன் என்று புலம்பி தள்ளுகிறார். அவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இந்தியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்றும் வர்க்கத்தினரை சாடாமல், அவர் அனுபவங்களை எழுதினால், நானும் எழுதுவேன், என் அறிவு திறமைக்கேற்ப… சுருக்க மாக சொன்னால், உண்மைக்கு நான் தலைவணங்குவேன் , பொய்மையை புரட்டி எடுத்து விடுவேன் ….
ஒருவர் செய்யும் காரியத்திற்கு அல்ல…இது பல பள்ளிகளில் இண்டியன்களின் சேட்டைகள்.நான் நியாயமான கருத்துக்களை வெளிபடுப்பதும் பொது ஏனய்யா உமது மூளை குடி பழக்கத்திற்கு போகிறது? தங்களுக்கு அப்படி ஒரு பழக்கம் இருந்தால் தயவு செய்து அதை தாங்களே வைத்துக்கொள்ளுங்கள்!
நன்றி திரு. திலீப் இது போன்ற கூற்மையான கருத்தை ஏழுத்தை நாம் அன்று செய்து இருந்தோம் என்றால் நம் சமுதாயம் எங்கோ சென்று இருக்கும். என்ன செய்வது இருந்த நமது தமிழ் பத்திரிகைகள் எல்லாம் அவனவன் எற்றமாதிரி மாதிரி அல்லவா எழுதினன்கள். இன்று செம்பருதி மூலமாக நமது வயிட்று எரிச்சலை கொட்டிக் தீர்கிறோம். இது ஒரு நல்ல தொடக்கம். நானும் சரி நிங்களும் சரி அல்லது மாற்றவர்களும் சரி எல்லோரும் நம் தமிழுக்காக நம் சமுயாத்துக்காக தான் எழுதுகிறோம். இன்றும் ஒரு தமிழ் பத்திரிகை ஜாதியை வைத்து நேரடியாக எழுதுகிறான். இதையும் நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். ஜாதி ஜாதி என்று இன்றும் பேச கூடிய மனிதர்கள் அதுவும் நமது நாட்டில் இருக்கிறார்கள். இப்படி கேடு கேட்ட நாய்கள் இருக்கும் பொழுது அடுத்து நாம் ஒரு வேதனையை சோதனைனையை சந்திக்க வேண்டி வரும். நாம் எவ்வளவு தான் கூக்குரல் இட்டாலும் இதை முதலில் ஒழிக்க வேண்டும். ஒருவன் அரசியலில் புகுந்து ஜாதியை வைத்தே கட்சியே ஆரம்பித்தான். இன்று நம்மிடம் இல்லை.
ஜி.மோகன் – கிள்ளான் அவர்களே, உங்களுக்கு ஒரு நகைச்சுவையை சொல்கிறேன் கேட்டு கொள்ளுங்கள். இந்தியர்கள் வறுமையின் பிடியில் இருந்த காலம் 18 ஆம் நூற்றாண்டு தொடக்கம். அப்பொழுது இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரர்கள், மலையகத்திற்கு தாழ்த்த பட்ட இந்திய பிரிவுகளில் இருந்து, 100,000 மனித மூல தனங்களை கொண்டு வந்தனர். இவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள். அதே நேரம் தாய்லாந்திற்கும் மியார்மாருக்கும் 100,000 மனித மூல தனங்களை கொண்டு சென்றார்கள். இவர்களில் அதிகமானவர்கள் தெலுங்கர்களும் மலையாளிகளும். மலேசியாவில் எப்படி தமிழர்கள் நிறைந்து இருக்கிறார்களோ, அப்படியே தாய்லாந்தில் தெலுங்கர்கள். இப்படி தாழ்த்த படடவர்கள், தங்களின் குலா தெய்வமான அய்யனாரை வழிபடவும், ஓய்வுநாட்களில் கல் அருந்தவும், குழந்தைகளை பராமரிக்கும் ஆயா கொட்டகைகளையும், இருக்க இருப்பிடமும், உணவு உண்டு வாழ ஊதியம் என்று முதலாளிகளை மஹான்களாக பார்த்தார்கள்…… பிறகு 1900-1950 வாக்குகளில், தமிழர்களின் பிரிவில் இருந்து செட்டியார்கள் வர்த்தகம் செய்ய மலையகம் வந்த பின்புதான் முருக வழிபாடு முழுமைவழிபாடாக மட்ட்ற பட்ட்து…..அதிகமான செட்டியார்கள் தான் முருக வழிபாடடை மாநில அளவில் கொண்டு சேர்த்தார்கள் ….அதனால் தான் மலேசியாயாவில் சைவமும் வைணவமும் மேலோங்கி இருக்க வில்லை ……அப்படி தாழ்த்த பட்ட பிரிவுகளில் இருந்து வந்தவர்கள், எப்படி திடீர் என்று உயர்ந்த ஜாதி ஆனார்கள் ? இன்னும் ஒரு உண்மை என்ன வென்றால், மலேசியாயாவில் நாம் யாரையும் “உன் ஜாதி என்ன என்று முகத்திற்கு நேராக கேட்கமாட்டொம்”…. காரணம் நமக்கே தெரியும் …. எனவே சிரித்து கொள்ளுங்கள் …. உண்மை ஒரு நாள் வெளியில் வந்திருச்சு என்று …. இன்னமும் ஆழமாக போனால், சாமி வேலுவின் அப்பா பெயர் சங்கிலி முத்து. இந்த பிரிவினர் சங்கிலி கருப்பன், ஜடா முனி போன்ற காவல் தெய்வங்களை வாங்கும் பிரிவினர். இதற்கும் மேல நான் பேசினால், சங்கிலி கோச்சுக்குவார் …
நான் தமிழன், என் மொழி தமிழ், என் இனம் தமிழினம். என் நாடு மலேசிய தமிழர் நாடு ..என் தந்தை தாயின் பூர்வீகம் தமிழர் நாடு. என் முழு மூச்சின் வேலை தமிழர்களை காப்பது. என் இயக்கம் தமிழர் தேசியம் மலேசிய. என் முழு ஈடுபாடு தமிழ் அறவாரியாம். என் இப்போதைய அரசியல் கட்சி PKR மாறப்போகும் கட்சி ப்ரிபூமி பெர்சத்து..இது என் உரிமை …திலீப்புக்கு துணிவு இருந்தால் யார் என்று சொல்லட்டும் உன் சமுதாய உயர்வை கையின் ஏந்துங்கள் ..ஒவ்வொவரு மனிதனுக்கும் தந் குமுதிய இனம் சார்ந்த ஊக்குவிப்பு இருக்க வேண்டும் .7 வது அறிவு அல்ல உணர்வு. நீங்கள் 6 ரோடு
இருந்துக்கொண்டால் அது உங்கள் புத்தி, எனக்கு அதையும் தாண்டி போகும் பல நீரோன்கள் காத்துள்ளது. உங்கள் அறிவுரைகளை எனக்கு தேவை இல்லை,என்பதால் நான் உங்களை நிராகரித்து விட்டேன். எனக்கும் இதை எழுத கேவலமாக உள்ளது. என் இனத்துக்கு எதையாவது எழுதுவேன். உங்களுக்கு ஏன் சஞ்சலம் என்று எனக்கு புரியவில்லை.தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் அடங்காது மனு தர்மம். நீங்கள் எந்த நீதி நியாத்தை உங்கள் பாடமாக சொல்ல வருகிறீர்கள். மனிதன் பலவற்றை உருவாக்கினான், என் தமிழ் தமிழன் உருவாக்கத்தில் உங்களுக்கு எங்கு வலிக்கிறது. இனம் இல்லாத அரசியலா உணர்வை கிழித்து உணர்வை காட்டுங்கள் உன் அமைதி யுகத்தை காட்ட துப்பாக்கி எடுத்து சுட்டுக்கொள்ளுங்கள்.அல்லது தெருவுக்கு வாங்கள்.தமிழன் மூளை என்ன சீனன் செய்யும் செயற்கை வெங்காயமா ?ஞானம் பெறுங்கள் அல்லது மடங்களுக்கு சென்று மனிதனை படியுங்கள். முடியாது போனால் சாமியாடிகளாக ஏமாற்றுங்கள். நான் ம இ காவை சாமுவேலை திட்ட முட்டாள் அல்ல இந்த உருப்படாத அப்பாவி பாமர மக்களை இன்னும் எத்தனை பேர் ஏய்க்கிறான் பட்டியல் போட்டால் கேசு வாதாட காசு கொடுக்க வருவீர்களா சொல்லுங்கள்.ஏராளமான யோகிகள் பதவிகள் காலியாக உள்ளது கோட்டையில் கொக்கரிக்கும் கோட்டான்களுக்கு சாங்கியம் பார்க்க சாமியாடிகள் போதவில்லை. கழுகும் நரியும் இண்டியனின் தலைவர்கள். தமிழன் தனித்தது வர வேண்டும் வருவோம் வேடிக்கை பாரும். நடுவீட்டில் நடமாடும் பேய்கள் அதிகம் உள்ளது சாட்டைகள் பத்தவில்லை.கட்சி தலைவனின் உச்சி மயிரை பிச்சி ஆணி அடிக்க நானும் மதுரை வீரன் சாமி போல அடனும்.அந்த நாள் எந்த நாள்.
சிவன் சாட்சியா
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசிய
திலீப், உயர்ந்த சாதியைச் சார்ந்த நீங்கள் எப்படி அங்கிருந்து இங்கு தப்பித்து வந்தீர்கள்?
ஐயா abraham terah அவர்களே …. நான் ஜாதிகளை நம்புவதில்லை. என் முன்னோர்கள்கள் 1937 தான் மலாயா வந்திருக்கிறார்கள். என் பாட்டனர் பெயரும் என் பெயரும் ஒன்று. என் தாத்தா அங்கிருந்து வரும் பொழுதே திருமணம் ஆனவர். பிறகு என் அப்பாவிற்கு இங்கிருந்து சென்று திருச்சியில் மனம் முடித்தனர் அவர் தம் பெட்றோர்கள். என் தாயார் சிகப்பு நிற அடையாள அட்டை வைத்துள்ளார், தமிழச்சி. தந்தையும் தமிழர் காரணம் அவரின் முன்னோர்களும் தமிழர்கள் (என்ன ஒரு கண்டுபிடிப்பு) இப்படியே கதையை 2 மணிநேரம் இழுக்க முடியும் …. இருபின்னும் இந்த தமிழர்களின் சமுதாயத்தில் நீ எந்த பிரிவில் இருந்து வருகிறாய் என்று என்னை கேட்டால் நான் என் மூதாதையர்களின் பெயர்களைத்தான் குறிப்பிடுவேன். எங்கள் வீட்டில் 6 பேருக்கு ராஜ ராஜ சோழர்களின் மன்னர்களின் பெயர் எப்படியோ ஒட்டி கொண்டு வரும்… பிறகு தான் கண்டு பிடித்தேன் இவர்கல் ராஜ ராஜ சோழ வம்சத்தவரின் விசுவாசிகள் என்று … எனவே எந்த ஜாதிலிகளின் அடிப்படையிலும் நான் உயந்து விடவில்லை, தாழ்ந்தும் விடவில்லை . கஷ்டப்பட்டு படித்து முன்னேறினேன்…. இதில் எனக்கு தமிழர் தெலுங்கர் மலையாளீ சிங்க் ஆங்கிலயேர்கள் என்று நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்…. என் தாய் மொழி தமிழ்…எனவே ஊரை எய்து பிழைக்கும் சில மனிதர்களை நான் தீட்டுவதில் தயக்கம் காட்டுவதில்லை … தமிழனை காப்பாத்துறேன் பேர்விழி என்று இவர்களின் வாழ்க்கை அனுபவங்களை தமிழர்களின் மீது தினிப்பார்களானால், அதையும் தட்டி கேட்க்க தயங்க மாட்டேன் …(இனிமேல் நிறைய எம்ஜியார் படம் பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது )
வாழ்த்துகள், திலிப்! தமிழனைக் காப்பாத்துறேன் பேர்வழி என்று சொல்லும் போது உங்களுக்கு கோபம் வருகிறது. ஒன்று தெரிகிறது. நீங்கள் இன்னும் யாரிடமும் அடி வாங்கவில்லை! தெலுங்கு மக்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் வாழ்கின்ற பகுதியில் அவர்கள் இல்லை. அதனால் அவர்களை பற்றி நான் குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அந்தக் காலத்தில் வெள்ளைக்காரன் ஒன்றை எழுதி வைத்தான். தமிழர்களும் தெலுங்கர்களும் குடிகாரக் கூட்டம் என்று! அத்தோடு சரி! ஆனால் மலையாளிகளை பற்றி உள்ளும் புறமும் அறிந்தவன். அவன் எப்படி யோசிப்பான், எப்படிக் கழுத்தறுப்பான். இதையெல்லாம் நான் அறிந்தவன். ஆனாலும் நான் பதிலடி கொடுக்கவில்லை.காரணம் அது என் வேலை அல்ல!
abraham terah அவர்களே, நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சார். அனுபவம் காலத்துக்கும் ஒத்துவராது, ஆனால் தத்துவம் அப்படியல்ல. எப்படி என்றால், திருக்குறளை பாருங்கள். அதில் அனுபவத்தையும் தாண்டி ஒரு ஞானம் இருக்கும். ஆனால் திருவள்ளுவரும் ஒரு சில இடங்களில் விமர்சனத்துக்குளாகிறார். ஒரு குரலில் (292- பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்: குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்) இப்படி உள்ளது. ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இதனை சுதர்மம் என்று வருணித்து, பொய்மையிலேயே சேர்கிறார். அதாவது தர்மம் மட்றும் அதர்மம் மட்டுமே இருக்கும் இடத்தில் ஒருவன், தன் அறிவிற்கு எட்டிய அளவில் தர்மகோட்ப்பாடுகளை அளவிடுவானாகில் , அவன் அதர்மமே செய்கிறான் என்கிறார். எனவே, தமிழனாகினாலும் சரி, தெலுங்கானாகினாலும் சரி, அவனாகினாலும் சரி இவனாகினாலும் சரி, மனித பிரிவினைகளை வைத்து ஒருவனை அளக்க முடியாது. கெடடவன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழன் சாமீ வேலு போல …
“ஒருவர் அரசாங்க வேலையில் உள்ளவர் அரசாங்கத்தை எதிர்து போராட முடியுமா ?. அரங்கத்திற்கு எதிர்ப்பாக குரல் கொடுக்க முடியுமா ? நீங்கள் சிந்திக்கவும். ஏன் இன்று கூட பெர்சே கூட்டத்தில் அரசாங்க வேலையில் உள்ளவர்கள் கலந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை நிச்சயம் என்று அறிக்கை விடுகிறார்கள்.” என்று ஜி.மோகன் – கிள்ளான் எழுதி இருந்தீர்கள். அப்படி என்றால் அரசாங்கத்தில் இல்லாதவர்கள்தான் போராட வேண்டுமா ? அவர்கள் தான் குரல் குடுக்க வேண்டுமா ? அதே சமயம் அரசாங்க லாபம் கிடைத்தால் அரசாங்க ஊழியர்களுக்கு ….. அதுவே ஜனநாயக வளர்ச்சி என்றால் அது அரசாங்கத்தில் இல்லாதர்வர்களுக்கு ….. பிரமாதம் சார் …..
MR .PONRANGAN ! உங்கள் தாய் தந்தையரின் பூர்வீகம் தமிழர் நாடு என்று நீங்ககள் கூறுவது ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடா ?அது திராவிட கட்சிக்காரர்களால், இந்தியாவிலுள்ள தமிழர்கள் அதிகம் வாழும் மாநிலத்துக்கு தமிழர்களை ஏமாற்றும் நோக்கத்தில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த அவலம் உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை !!எதற்கு சொல்கிறேன் என்றால் இப்போது தமிழ் நாடு என்று சொல்லப்படும் தமிழ் மாநிலத்தில் முன்பு CM மாக இருந்த ஒரு ஜந்து தமிழ்,தமிழ்,தமிழ் என்று கூவியே தமிழனை மொட்டையடித்து இன்று அந்த ஜந்துவின் குடும்பம் ஆசியாவிலேயே பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்று விட்டது !!! அடுத்து நமது நாட்டிலே அடுக்கடுக்காக தமிழ் பேசி அசத்திய மாமனிதர் இங்கு வாழும் தமிழர்களை அடக்கி வாழும் வழி தெரியாமல் ஆக்கிவிட்டது ! இப்போது எதற்கு எடுத்தாலும் தமிழ் தமிழ் தமிழ் என்று கூவும் உங்கள் போக்கை பார்த்தால் ஏதோ அச்சம் மூட்டுவதாக உள்ளது !!!! சரி அது போகட்டும் ஏதோ தமிழ் அறவாரியம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் , அதற்கு மானியங்கள் கொடுப்பது சிலங்கோர் அரசாங்கமா அல்லது மத்திய நஜிப் அரசாங்கமா? இல்லை ஒரு பேச்சுக்கு கேட்டுவைத்தேன் ஹி ……ஹி ……ஹி ….
போராட்டம் என்பது தெருவில் இறங்கி நமது வெறுப்பை காட்டுவதும் ! கோஷம் எழுப்பி கூச்சல் போடுவதுதான் என்று இல்லை ! கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்றான் பகவான் ! சமுதாயத்திற்கும் ! நாட்டிற்கும் ! மனித நேயத்திற்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்கிறோமா என்பது தான் கேள்விக்குறி ! நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு , நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு ! என்ற பாடல் வரிகள் சிந்திக்க பட வேண்டியவை ! ஏற்கனவே நாம் கூலி காரா சமுதாயம் ( பழைய ஆங்கில அகராதியில் லேபர் என்றால் இந்தியன் என்று இருந்த காலம் உண்டு ) குடிகார சமுதாயம் ! லுனசில் சம்சுவுக்கு பலியான நம்மவர்களை மறந்து விட்டொம் ! இன்று வெட்டு! குத்து ! குண்டர் கும்பல் சமுதாயம் ! போதை பொருள் விநியோகத்தில் முதன்மை ! இதயெல்லாம் அரசாங்கம் மாட்ற முடியுமா ! அல்லது அரசாங்கத்திடம் மாட்ற சொல்லி போராட்டம் நடத்த வேண்டுமா ! மணி மன்றத்தின் மூலம் அண்ணன் அன்புடன் இளைஜர் களின் முன்னேற்றத்திற்காக தலைநகரில் சுட்ரி திரிந்தோம் ! இன்று மணி மன்றம் இருக்கிறதா ??? இருக்கலாம் !! இன்று நாம் இளைஜர் இல்லை ! மாற்றங்கள் நம்மிடம் உருவாக வேண்டும் ! தமிழன் உருப்பட 10 காரணங்கள் வேண்டாம் ! ஒரு மூன்று காரணங்களை முன்னெடுத்து ! அதில் தீவிரமாக பாடு பட்டால் இன்னும் நமக்கு எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கை பிறக்கும் !! கல்வியில் மேம்பாடு ! பொருளாதார வளர்ச்சி ! பண்புள்ள சமுதாயம் !
“கல்வியில் மேம்பாடு ! பொருளாதார வளர்ச்சி ! பண்புள்ள சமுதாயம் !” என்று, தமிழன் உருப்பட திரு s .மணியம் அவர்கள் 3 விஷயங்களை குறிப்பிட்டுள்ளீர்கள். இதனை எப்படி செயல் படுத்துவது என்று கொஞ்சம் விளக்குங்கள் சார் ….
s maniam நீங்கள் சொல்லுகின்ற அந்த மூன்று காரணங்களையும் எந்த இயக்கமும் முன்னெடுக்கப் போவதில்லை. அவரவர் குடும்பத்தில் அவரவர் முன்னெடுத்தால் நாம் முன்னேறி விடலாம். இப்போது எல்லா இயக்கங்களும் மானியங்களுக்காக அரசாங்கத்திடம் கையேந்தி கொண்டு நிற்கின்றன!
திரு. திலீப் அவர்கள் வேண்டாத வீண் வார்தைகளில் சிக்கி கொள்கிறார் என்று தோன்றுகிறது நிதானம் மிகவும் அவசியம் சும்மா எழுதுகிறேன் என்று நினைது வேண்டாத வார்தைகளை எழுதின் மூலம் திணிக்கிறார் என்றும் தோன்றுகிறது. நான் சொல்ல வந்ததை உள் வங்கி பார்க்க வேண்டும். யார் சொன்னது அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் போராடவில்லை என்று. பிரச்சனை என்று வந்தால் தமிழனுக்கு ஒன்றாக குரல் கொடுக்க படுகிறது அது அரங்கத்தில் வேலை செய்பவர்களும் சரி செய்யாதவர்களும் சரி. ஒரு சில சமயயங்களில் அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் அரங்கத்திற்கு போராட தயங்குகிறார்கள் காரணம் பல பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி உள்ளத்தால். இது எலோருக்கும் தெரிந்த ஒன்று. இங்கு நான் சொலித்தான் தெரியவேண்டியதில்லை
The United Nations (UN) is an intergovernmental organization to promote international co-operation. A replacement for the ineffective League of Nations, the organization was established on 24 October 1945 after World War II in order to prevent another such conflict. At its founding, the UN had 51 member states; there are now 193. The headquarters of the United Nations is in Manhattan, New York City, and experiences extraterritoriality. Further main offices are situated in Geneva, Nairobi, and Vienna. The organization is financed by assessed and voluntary contributions from its member states. Its objectives include maintaining international peace and security, promoting human rights, fostering social and economic development, protecting the environment, and providing humanitarian aid in cases of famine, natural disaster, and armed conflict.
ஐக்கிய நாட்டு சபை ஒரு வெத்து வேட்டு -காகித புலி– அதற்க்கு கொடுக்கும் பணம் வீண்.
அத்துடன் ரத்து அதிகாரம் யாருக்கும் இருக்கக்கூடாது– அப்படி இருந்தால் நீதிக்கு அங்கு இடமில்லை என்பது தெள்ள தெளிவு–
தமிழர் இழந்ததை நினைவு கூறுகையில் ஏன் இத்தனை போராட்டம்னு பார்த்தீங்கன்னா? தமிழர் ஒன்று சேர்ந்திருவோம! நம்ம முதுகில் சவாரி செய்த இண்டியன்களுக்கு ஆப்பு வச்சிருவோம! தமிழர் மீண்டும் பொற்காலத்தை நோக்கி…தொடரும்
“ஒருவர் அரசாங்க வேலையில் உள்ளவர் அரசாங்கத்தை எதிர்து போராட முடியுமா ?. அரங்கத்திற்கு எதிர்ப்பாக குரல் கொடுக்க முடியுமா ? நீங்கள் சிந்திக்கவும். ஏன் இன்று கூட பெர்சே கூட்டத்தில் அரசாங்க வேலையில் உள்ளவர்கள் கலந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை நிச்சயம் என்று அறிக்கை விடுகிறார்கள்.” என்று ஜி.மோகன் – கிள்ளான் எழுதி இருந்தீர்கள். அதற்கு நான் “அப்படி என்றால் அரசாங்கத்தில் இல்லாதவர்கள்தான் போராட வேண்டுமா ? அவர்கள் தான் குரல் குடுக்க வேண்டுமா ? அதே சமயம் அரசாங்க லாபம் கிடைத்தால் அரசாங்க ஊழியர்களுக்கு ….. அதுவே ஜனநாயக வளர்ச்சி என்றால் அது அரசாங்கத்தில் இல்லாதர்வர்களுக்கு ….. பிரமாதம் சார் …..” என்று எழுதி இருந்தேன்…. உடனே நீங்கள் (ஜி.மோகன் – கிள்ளான்) “திரு. திலீப் அவர்கள் வேண்டாத வீண் வார்தைகளில் சிக்கி கொள்கிறார் என்று தோன்றுகிறது நிதானம் மிகவும் அவசியம் சும்மா எழுதுகிறேன் என்று நினைது வேண்டாத வார்தைகளை எழுதின் மூலம் திணிக்கிறார் என்றும் தோன்றுகிறது.” என்று எழுதி உள்ளீர்கள். ஐயா, ஹிண்ட்ராப் போராளி திரு. வசந்தகுமார் அவர்களின் மனைவி, வீட்டு மாதாந்திர தவணை கூட கட்டிட முடியாமல் கஷ்ட்ட பட்ட்து அணைத்து நாளிதழ்களிலும் வந்தது; காரணம் இந்தியர்களுக்காக போராடி சிறையில் இருந்தார் திரு. வசந்தகுமார் அப்பொழுது. அவர்களுக்கு ஏற்படாத மனா உளைச்சலா ? அவர்களுக்கு ஏற்படாத அநியாயங்களா ? ஆனால் இன்று பலர் கண்களை திறந்திருக்கிறது ஹிண்ட்ராப். எனவே உங்கள் கூட்ரின் படி பார்த்தல், அடுத்தவர்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. தமிழ் பள்ளி ஆசிரியர்கள் வாயை திறக்க மாடடார்கள்; ஏன் என்றால் அவர்கள் நல்லவர்கள் …