உண்மைய பேசவிடாது தடுத்த கொழும்பு ஐ.நா அதிகாரிகள்!

unoஇராணுவம் பிடித்து வைத்துள்ள காணிகள் மற்றும் வேறு எந்த பிரச்சனைகளையும் சிறுபாண்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் ஐசக் ரீடாவிடம் கூற வேண்டாம் என கொழும்பிலிருந்து வந்த ஐக்கிய நாடுகள் சபையின் சபையின் அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக வளளாய் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இராணுவத்தின் வசம் இருக்கும் தமது காணிகள் வேண்டும் என்ற கோரிக்கையை கூட தம்மால் சிறுபாண்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளரிடம் முன்வைக்க முடியவில்லை எனவும் வளலாய் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறுபாண்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர்,

நேற்று காலை 7.30 மணியளவில் பலாலியை சொந்த இடமாக கொண்டு தற்போது வளாலாயில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே குறித்த மக்களுடைய உண்மையான பிரச்சனைகள் பேசப்படாது தடுக்கப்பட்டுள்ளன. குறித்த மக்கள் பலாலியிலிருந்து 1990 ஆம் ஆண்டு யூன் மாதம் 15 ஆம் திகதி இடம்பெயர்ந்து கரவெட்டிக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற மக்கள் தொடர்ச்சியாக 15 தடவைகள் இடம்பெயர்ந்து இறுதியில் வளலாயில் ஒரு காணியை வாங்கி வீட்டு திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் சேவா லங்காவின் நிதியுதவியில் கடந்த வருடம் வீடு ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு குடியேறி வாழ்ந்து வரும் மக்களை,

சிறுபாண்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் சந்திப்பதற்கான எற்பாடுகள் நேற்று முன்தினம் 10 ஆம் திகதி சேவா லங்காவினை சேர்ந்த அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசேட அறிக்கையாளரை சந்திப்பதற்கான மக்கள் தெரிவு செய்யப்பட்டு குறித்த வீட்டு திட்டம் நன்மையளிக்கின்றது என்ற விடயம் மாத்திரமே கூற வேண்டும் எனவும்,

வேறு விடயங்கள் எதனையும் கூற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்றே நேற்றைய தினமும் சிறுபாண்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளரோடு கொழும்பில் இருந்து வருகை தந்த அதிகாரிகளாலும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த மக்கள் கூறுகின்றனர். இதனால் தம்முடைய உண்மையான பிரச்சனைகள் மற்றும் இராணுவம் பிடித்து வைத்துள்ள எம்முடைய காணிகள் எமக்கு வேண்டும் என்ற கோரிக்கையை கூட தம்மால் முன்வைக்க முடியவில்லை என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

சந்திப்பின் முடிவில் தம்மை கடற்கரைக்கு அழைத்து சென்ற சிறுபாண்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் உள்ளிட்ட குழு அங்கு வலைவீசி மீன்பிடிப்பது போன்று வீடியோ பதிவு செய்து கொண்டதாகவும் அந்த மக்கள் கூறுகின்றனர். இதேவேளை இவ்வாறான பக்கச்சார்பு உடைய நடவடிக்கைகள் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் எடுக்கும் நிலைப்பாட்டில் தாக்கம் செலுத்தும் என்பதால் உரியவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-http://www.puthinamnews.com

TAGS: