யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த வணிகக் கல்வி ஆசிரியரான ஜெனதாஸ் பசில். இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இவர் 15.10.2016 அன்று காலமாகிவிட்டார். வீதி விபத்தில் சிக்கிய அவர் சுய நினைவு இழந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கால்கள் இரண்டும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததால் அதனை மருத்துவர்கள் அகற்றி இருந்தார்கள். இன் நிலையில் அவருக்கு நடந்த கொடூரங்களை அதிர்வின் புலனாய்வு செய்தியாலர் அறிந்துள்ளார். அதாவது கால்களை அகற்றிய பின்னர் அவருக்கு ரத்தம் தேவைப்பட்டுள்ளது. அதனை ஏற்ற மருத்துவார்கள் முனைந்தவேளை அங்கே கூடி நின்ற அவரது உறவினர்கள், ரத்தம் ஏற்றுவதை எமது மதம் ஏற்றுக்கொள்ளாது என்று கூறி பெரும் பிரச்சனை கிளப்பி உள்ளார்கள்.
ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் வேளையில், இவ்வாறு கூறுவது என்பது பெரும் ஈனத்தனமான செயலாக உள்ளது. தொடர்ந்து சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் பட்சத்தில் அவரது மதமோ, இனமோ, கலாச்சாரத்தையோ தாங்கள் கவனத்தில் கொள்வதில்லை என்றும். உயிரை எப்படியாவது காப்பாற்றுவது தான் தமது இலக்கு எனவும் சிகிச்சையளித்த மருத்துவர்கள் விடாப்பிடியாக நின்றுள்ளனர். ஆசிரியருக்கு இரத்தம் ஏற்ற வேண்டுமென மருத்துவமனைக்கு சென்ற சக ஆசிரியர்களும், மாணவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
இதேவேளை பல மாணவர்கள் ரத்தம் கொடுக்க முன்வந்தால் அங்கே பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், அங்கே நின்ற மதப் பெரியவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாக இருந்துள்ளனர். இரத்தம் ஏற்றுவது தவிர்ந்த ஏனைய சில அவசர சிகிச்சைகளுக்கும் கூட குறித்த மதப் பெரியவர்கள் தடை போட்டுள்ளனர். தாம் கடவுளை பிரார்த்திப்பதாகவும் அவர் உடனே காப்பாற்றுவார் என்றும் மூடத்தனமாகப் பேசியுள்ளார்கள் இந்த மதவெறி பிடித்த மதவாதிகள். இறுதியில் என்ன நடந்தது ? ரத்தம் இல்லாமல் அந்த ஆசிரியர் பரிதாபமாக இறந்துபோனார்… இதற்கு பெயர் தானா மதம் ?
தேவையான குருதி ஏற்றப்பட்டு ஆசிரியர் உயிர் பிழைத்திருந்தால், இன்னும் பல்லாயிரம் மாணவர்களின் வாழ்வில் அவர் ஒளியேற்றி இருப்பார். கடந்த இரு வாரங்களுக்குள்ளாக சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் மதத்தின் பெயரால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதே உண்மையாகும்.
-http://www.athirvu.com