கூடிய விரைவில் பிரபாகரனால் ஆபத்தில் சிக்கப்போகும் நல்லாட்சியும் மஹிந்தவும்!

prabbதற்போதைய சூழலில் மிக முக்கியமான திருப்புமுனைகள் பலவற்றை இலங்கை முகம் கொடுத்து கொண்டு வருகின்றது.

அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் தலைவர் தொடர்பிலேயே அதிக கருத்துகள் அதுவும் குறிப்பாக முரண்பட்ட கருத்துகளே வெளிப்படுத்தப்படுகின்றது.

நல்லாட்சியை சிக்கலில் சிக்க வைக்க மஹிந்த தரப்பு முயன்று வருவது வெளிப்படையாக தெரிந்து விட்டதாகவும் அதன்படி கூடிய விரைவில் பிரபாகரனின் மரணம் தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்றும் மஹிந்த தரப்பு அதற்கான ஆயத்தங்களை செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் விடுதலைப்புலிகள் தலைவரின் மரணம் என்பது தற்போது வரையிலும் மர்மமாகவே காணப்படுகின்றது.

அண்மையில் கமால் குணரத்ன ஆரம்பித்து வைத்தது முதல் விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பல்வேறு பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு கொண்டு வரும் நிலையில் அவருடைய மரணம் தொடர்பில் மஹிந்த, பொன்சேகா, கோத்தபாய அனைவருமே பின்வாங்க முயலும் கருத்துகளை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதனையும் தாண்டி தற்போது பசில் ராஜபக்ச கூறியுள்ள கருத்து பாரிய அளவு சந்தேகக் கணைகளை எழுப்பியுள்ளது. அதாவது தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர் இறக்கவில்லை என்பதை வலுப்படுத்தும் விதமாக கருத்து ஒன்றை பசில் முன்வைத்துள்ளார்.

கடந்த ஆட்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட வில்லை ஆனாலும் நல்லாட்சியில் அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என பசில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசிய கட்சியுடன் நல்லாட்சி இணைந்து செயற்பட்டு வருவதால் பிரபாகரனுடைய மரண சான்றிதழ் தொடர்பில் எளிதான செயற்பாடுகளை நல்லாட்சி முன்னெடுக்க முடியும் எனவும் பசில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியிருந்தார்.

பிரபாகரனின் மரண சான்றிதழ் சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த போதும் அது தொடர்பில் கடந்த ஆட்சியாளர்கள் வெளிப்படையான கருத்துகளை இதுவரையில் முன்வைக்கவில்லை ஆனாலும் தற்போது அவர்களே பிரபாகரனின் மரண சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளமை வியக்கத்தக்கது.

தற்போது பசிலின் கருத்துகளுக்கமைய நோக்கப்படுமானால் பிரபாகரனின் மரண சான்றிதழ் முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைக்கும் கருத்தாகவே இது நோக்கப்படுகின்றது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இது வரையிலும் வெளிப்படுத்தப்படாத இரகசியம் தற்போது வெளிப்படுத்த முயற்சி நடக்கின்றது. இதில் மஹிந்த தரப்பு நல்லாட்சியை சிக்கவைக்கும் செயலில் அல்லது இது வரையில் பொறுமைகாத்து வந்த பசில் கடந்த கால குற்றங்களை வெளிப்படுத்தி தான் தப்பிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றாரா?

அல்லது நல்லாட்சியையும் மஹிந்தவையும் சிக்க வைத்து விட்டு, ஆட்சியை தான் கைப்பற்றும் முயற்சியில் அவர் ஈடுபடுகின்றாரா? என்ற இருவகை சந்தேகங்கள் காணப்படுகின்றது.

தற்போது அனைவராலும் விடுதலைப்புலிகள் தலைவரின் மரணம் தொடர்பில் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்ற காரணத்தினால் நல்லாட்சி அவற்றிக்கு முகம் கொடுக்க வேண்டிய சிக்கலில் சிக்கியுள்ளது.

அதேபோன்று போர்க்குற்றம் தொடர்பில் சிக்கியுள்ள போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்களாக கூறப்படும் மஹிந்த, கோத்தபாய போன்றோருக்கும் பாரிய தலையிடியாக இது அமையும் என்பதும் ஒரு வகையில் உண்மையே.

அத்தோடு ஏழு ஆண்டுகள் மறைக்கப்பட்டு வந்த இலங்கையின் மிகப்பெரிய இரகசியத்தை தற்போது வெளிப்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை நல்லாட்சிக்கு ஏற்பட்டுள்ளது .

இதனால் பிரபாகரனுக்கு மரண சான்றிதழை கொடுக்க அரசு முற்படுமா? என்பது மிகப்பெரிய வினாவாக காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: