யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்படி பிரிவு யாழ்.கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் சிலரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த பிரிவு யாழ்.பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீ கஜன் தலைமையில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உருவாக்கி உள்ளார்.
இதன்போது வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடு வழங்கினால் மேற்படி குழு உடனடி நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com





























