இலங்கையில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கு தேசிய ரீதியில் தகுந்த இடம் கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிவதாக ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி ரீட்டா ஐசெக் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது இதனை கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தை அதிகளவில் வைத்திருப்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரீட்டா குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர இலங்கையில் தோட்ட தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கை சேர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும் மார்ச் மாதம் நடைபெறும் 34 வது ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் அறிக்கை ஒன்றை முன்வைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com