பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது பொதுச்செயலர். கோபி அனானுக்கு அடுத்தபடியாக கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி இந்த பொறுப்பை ஏற்றார்.
இவர் கொரியாவின் சுங்ஜூ நகரத்தில் 1944 ம் ஆண்டு, ஜூன் 13 ல் பிறந்தார்.
பான் கி மூன் 1970 ம் ஆண்டு, சியோல் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு உறவுகள் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார்.
அடுத்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஜான் எப் கென்னடி அரசாட்சிப் பள்ளியிலிருந்து பொது ஆட்சிப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
தென் கொரியாவின் இந்தியத் தூதரகத்தில் முதன்முதலாக மூன் பணியில் சேர்ந்தார்.
பிறகு, கொரிய வெளியுறவுத் துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
இவரை பற்றிய இன்னும் விரிவான தகவல்களுக்கு
-http://news.lankasri.com