ருமேனியா பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உலோகத் துண்டானது 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வேற்று கிரகவாசிகள் பயன்படுத்தியது என்ற தகவல் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ருமேனியாவில் 1973 ஆம் ஆண்டு வாக்கில் உலோகத் துண்டு ஒன்றை வேற்று கிரகங்கள் குறித்து ஆய்வு நடத்தும் ஆய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்றது.
இந்த உலோகத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கடும் வியப்பில் ஆழ்ந்தனர். அந்த உலோகமானது 90 விழுக்காடு அலுமினியம் என தெரிய வந்ததே அதற்கு காரணம்.
மனிதர்களால் அலுமினியம் உருவாக்கப்பட்டு வெகுசன பயன்பாட்டிற்கு வந்தே வெறும் 200 ஆண்டுகளே ஆகியுள்ளன. ஆனால் குறித்த உலோகத்தின் பழமையை சோதித்த விஞ்ஞானிகளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
குறித்த உலோகத்தின் பழமையானது 250,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். குறிப்பிட்ட உலோகம் அவர்கள் பயன்படுத்திய எந்திரத்தில் இருந்து கழண்டு விழுந்திருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருகின்றனர்.
ஆனால் அந்த உலோகத்தின் வடிவமானது இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜேர்மனியின் போர் விமானத்தில் பயன்படுத்தப்பட்டது போன்று இருப்பதாக ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி குறித்த உலோகமானது கைகளால் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். குறிப்பிட்ட உலோகமானது மிகவும் எடை குறைவானதும் ஆனால் வடிவம் பெரிதானதாகவும் உள்ளது.
1973 ஆம் ஆண்டு ருமேனியாவில் இருந்து குறிப்பிட்ட உலோகத்தை கண்டெடுத்த பின்னர் ஆய்வாளர்கள் இந்த உலோகம் குறித்து எந்தவித தகவலையும் வெளிவிடவில்லை. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
20 செ.மீ நீளம் கொண்ட இந்த உலோகம் வேற்று கிரகவாசிகளால் கோடரியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் கோடரி பயன்படுத்த வேண்டும் எனில் அவர்கள் பூமியில் இருந்திருக்க வேண்டும்.
அப்படியெனில் 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வேற்று கிரகவாசிகள் வந்து தங்கி சென்றுள்ளனரா என்ற கேள்விக்கு ஆய்வாளர்களால் உறுதியான பதில் இல்லை.
-http://news.lankasri.com