2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித அவலங்கள் தொடர்பில் வெளிநாட்டு மனித உரிமை ஆவர்வல்கள் நாடகம் ஒன்றை அரங்கேற்றம் செய்யவுள்ளனர்.
ஐரோப்பாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இலங்கை செல்கின்றனர். வடபகுதியில் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டன என்பது தொடர்பில் தெரியாமல் தெற்கு கடற்கரையில் பொழுதை கழிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும் அங்கு இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள், மனித பேரவலங்களை வெளியிட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து ஊடகங்களின் சுதந்திர சாட்சியங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இளம் தமிழ் பெண்ணான நிலா சிக்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக பிரித்தானிய பெண் ஒருவர் செயற்பட்டுள்ளார்.
இவ்வாறான அனர்தத்தின் போது சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே முயற்சித்த போதும் அதன்மூலம் யாரும் பாதுகாக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் போரில் இடம்பெற்ற மனித பேரவலங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவற்றினை அடிப்படையாக கொண்டு இந்த நாடகம் அமையவுள்ளது.
முன்னனி மனித உரிமை நாடக ice&fire நிறுவனத்தின் கலை இயக்குனர் Christine Bacon என்பவரினால் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் Still Counting the Dead என்ற திரைப்படத்தின் ஆசியரான ஊடகவியலாளர் Frances Harrison மற்றும் சித்திரவதையில் இருந்து விடுதலை அமைப்பின் ஆய்வாளரும் சர்வதேச வழக்கறிஞருமான Ann Hannah கலந்துரையாடவுள்ளனர்.
சித்திரவதையிலிருந்து தப்பி பிரித்தானியா வந்தவர்களின் சுதந்திரத்தை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் உரிமைகள் ஊக்குவிக்கப்பதற்கு முயற்சிகளை Frances Harrison மேற்கொண்டு வருகிறார். அத்துடன் அவர்களுக்கு நேரடி மருத்துவ சேவைகளையும் வழங்கி வருகிறார்.
இது தொடர்பில் வைத்தியர் சுதாகரன் நடராஜா, சர்வதேச ஆய்வுகள் மையம் மற்றும் ஓரியண்டல் பாடசாலை, ஆபிரிக்க ஆய்வு (SOAS) என்பனவற்றின் தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
The Island Nation, லண்டனில் உள்ள Arcola திரையரங்கில் இன்று முதல் நவம்பர் 19ம் திகதி வரையான மூன்று வார காலப்பகுதிக்கு இந்த நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.
-http://www.tamilwin.com