விடுதலைப் புலிகளின் காலத்தில் ஆவா குழுவா? பின்னணியில் செயற்பட்ட இராணுவத்தினர்

Jaffna-Boys-06யாழ்ப்பாணத்தில் ஆவா என்ற பெயரில் மோட்டார் சைக்கிளில் பயணித்து குற்ற சம்பவங்களை மேற்கொள்ளும் குழு, கடந்த அரசாங்க காலப்பகுதியில் செயற்பட்ட இராணுவ பிரதானியின் செயற்பாட்டில் இரகசியமாக கட்டியெழுப்பப்படுகின்ற ஒன்று என தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்த குழு யுத்தம் நிறைவடைந்த பின்னர் மிகவும் நுட்பமாக கட்டியெழுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.

எனினும் இது தொடர்பான தகவல்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக இராணுவத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், போர் ஓய்வின் பின்னர் ஆவா குழு போன்ற பல குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.

இந்திய திரைப்படங்களின் அனுபவத்தை பெற்றுக் கொண்டு இளைஞர் குழுக்கள் வாள்களை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் தாக்குதல் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அவ்வாறான குழுவொன்றின் உறுப்பினர்கள் இருவர், கொக்குவில் பொலிஸ் பிரிவில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டனர்.

யத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்தே இவ்வாறான குழுக்கள் யாழில் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் விடுதலை புலிகள் காணப்பட்ட காலப்பகுதிகளில் அவ்வாறான குழுக்களை காண முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் வாள்வெட்டு கும்பலான ஆவா குழு என்று கருதியே மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: