சமூக விரோத செயற்பாடுகளினால் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட கிளிநொச்சி மற்றும் ஏனைய பகுதிகளில் அண்மைய நாட்களில் ஒருவித பதற்ற நிலை நிலவி வந்தது.
இந்நிலையில், தற்போது குறித்த பகுதிகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மக்கள் சுமூகமான இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலம்சூரிய கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இதன் காரணமாக அண்மைய நாட்களில் வடமாகாணத்தில் பதற்ற நிலை நிலவி வந்தது.
குறித்த மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரி வடகிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டு கடந்த 25ஆம் திகதி நிர்வாக முடக்கல் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் பல இடங்களில் கறுப்பு கொடிகளும் பறக்க விடப்பட்டிருந்தன.
தற்போது வடக்கில் நிலவி வந்த பதற்றம் தனிக்கப்பட்டு சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வடக்கில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஆவா குழுவினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்று குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com