முல்லைத்தீவில் மாவட்டத்தில் மீள்குடியேறிய குடும்பங்களில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் குடும்பங்களுக்கு மாவட்ட செயலகத்தின் தெரிவின்படி நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பயனாளிகள் தமது வீடுகளை கட்டுவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்தநிலையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் பயனாளி ஒருவர் நிரந்தர வீடு ஒன்றை காட்டுவதற்காக அத்திவாரம் வெட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது அவருடைய சமதரை காணியை அகழ்ந்தபோது செல்லடித்துப்போன ஒரு உலைப்பானையை கண்டெடுத்துள்ளார்.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்த குடும்பங்களின் அவல நிலையை எடுத்துக்காட்டும் அந்த உலைப்பானை முதலில் சன்னங்களினால் தாக்கப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது.
அன்று உணர்ச்சி கவிஞன் காசியானந்தன் சொல்லிய கவி வரிகள் தான் இப்பொழுது நினைவிற்கு வருகின்றது
தமிழனுக்கு உழைவைத்த தமிழ்செய்தி ஏட்டை தமிழனே படிக்கின்றான் பார் வெக்கக்கேட்டை.
இன்று குறித்த உலைப்பானை சொல்லும் செய்தியை எல்லோரும் படித்துத்தான் ஆகவேண்டும் ஏனெனில் தமிழர் சிலர் தமிழ்மக்களுக்கு நடந்த கொடூர நிகழ்வுகளை மறந்துவிட்டனர்.
அது நடந்து முடிந்த கதையாக இருக்கலாம் ஆனால் அப்படி இனியும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது.
இன்று ஒரு உலைப்பனை தனக்கு நடந்த கொடூரத்தை எடுத்துக்காட்டுகின்றது
பெரினவாத சக்திகள் தமிழ்மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள கொடூர வரலாற்று தடயங்கள் தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களில் புதைந்து கிடக்கின்றன.
இவ்வாறான சூழலில் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்மக்கள் தமக்கு ஏற்பட்ட கொடுமையான வரலாற்றை எளிதில் மறந்துவிடமாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
-http://www.tamilwin.com