ஆவா குழுவினை கட்டுப்படுத்துவதற்கு அனுமதியளிக்குமாறு அரசாங்கத்திடம், இராணுவம் கோரியுள்ளது.
ஆவா குழுவினால் வடக்கில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலையை மாற்றியமைக்க அனுமதி வழங்குமாறு உத்தியோகப் பற்றற்ற ரீதியில் கோரப்பட்டுள்ளது.
நாட்டின் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படாத நிலையில் இராணுவம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையீடு செய்ய முடியாது.
எனவே, ஆவா குழுவினை கட்டுப்படுத்த அனுமதியளிக்குமாறு அரசாங்கத்திடம் உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இராணுவம் அனுமதி கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஆவா குழுவினை இராணுவத்தினர் இயக்கி வருவதாகத் தெரிவித்து அந்த குழுவினை பாதுகாக்க தமிழ் அரசியல்வாதிகள் சிலர் முயற்சிப்பதாகவும் ஊடகத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் ஆவா குழுவின் தவறுகளை படைத்தரப்பினர் மீது சுமத்துவதற்கு முயற்சிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com