படகுகளில் வரும் அகதிகளுக்கு புகலிடம் கிடையாது: பிரதமர் அதிரடி அறிவிப்பு

svREFUGEEBOAT-420x0அவுஸ்ரேலியா நாட்டிற்கு படகுகளில் வரும் அகதிகளுக்கு புகலிடம் மறுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களை இன்று சந்தித்த அவுஸ்ரேலியா பிரதமரான Malcolm Turnbull இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அகதிகளை கடத்தி படகுகள் மூலம் அவுஸ்ரேலியா நாட்டில் புகலிடத்திற்காக அனுப்பி வைக்கும் நடவடிக்கையை தடுக்க இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் பேசியபோது, ‘இனிவரும் காலத்தில் படகுகளில் விசா இல்லாமல் வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு நிச்சயமாக புகலிடம் அளிக்கப்பட மாட்டாது.

இதுமட்டுமில்லாமல், Nauru மற்றும் Manus ஆகிய தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கும் புகலிடம் மறுக்கப்படும்.

அதாவது, 2013ம் ஆண்டு யூலை 19-ம் திகதி முதல் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு புகலிடம் அளிக்கப்பட மாட்டாது.

எனினும், படகுகளில் வரும் வாலிபர்களுக்கு மட்டுமே புகலிடம் மறுக்கப்படும்.

குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் எதிர்காலத்தில் அவுஸ்ரேலியா விசா பெற தகுதியானவர்களாக இருந்தால், இவர்களுக்கு புகலிடம் அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

-http://news.lankasri.com