இலங்கையின் வரலாறு இந்தியாவில் இருந்து வந்தவர்களால் தொடங்கவில்லை

SriLanka Mapஇந்தியாவில் இருந்து வந்து குடியேறிவர்களால் இலங்கையின் வரலாறு ஆரம்பமாகவில்லை என பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இலங்கையில் குடியேற்றங்களை ஏற்படுத்தியதில் இருந்தே இலங்கையில் வரலாறு ஆரம்பமாகின்றது என்ற நிலைப்பாடு தவறானது எனவும் அவர் கூறியுள்ளார்.

வட இந்தியாவில் இருந்து வந்தவர்களால் இலங்கையில் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாக சம்பிரதாயபூர்வமாக கூறப்பட்டாலும் புதிய ஆராய்சிகள் இந்த நிலைப்பாட்டை மாற்றும் வகையில் அமைந்துள்ளது எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய நிலைப்பாட்டுக்கு சவால் விடுக்கும் வகையிலான சாட்சியங்கள் கண்டறியப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மலை பிரதேசங்களில் பூர்வீக குடிகள் வாழ்ந்துள்ளனர்.

மலை பங்கான பிரதேசங்களில் காணப்படும் காலநிலை மாற்றங்களால், இதுவரை இலங்கையில் கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் தொழில்நுட்பம், கலாச்சார வளர்ச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்யவது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

எனினும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன.

பலாங்கொடை, ராஸ்ஸகல, இலுக்கும்புர, லுணுகல்கே, பரகஹாமடித்த கல்கே, அலுத்கல்கே, மெதகந்த போன்ற மலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

கால நிர்ணயம் செய்வதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கண்டறியப்பட்ட புராதன பொருட்கள் தொடர்பான அறிக்கை கிடைத்ததும் இதனை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: