சம்பந்தன், விக்கி, மாவை சிறந்த தலைவர்கள்….!

samsenavikஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா போன்றோர் சிறந்த அரசியல் தலைமைகளாக இருக்கின்றனர்.

எனினும், ஒரு சில அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர் என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, யாழ். மாவட்டத்தில் 70 மதுபான நிலையங்கள் இயங்குகின்றன. அவற்றில் ஒன்றைக் கூட இராணுவம் நடத்தவில்லை.

தென்னிந்திய திரைப்படங்களைப் பார்த்து அதனால் யாழ்ப்பாண இளைஞர்கள், அதன் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

பொலிஸார் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த, அவர்களுக்கு உதவுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவர்களுக்கு எங்களுடைய உதவி தேவை. அதனை நாங்கள் வழங்கவே தயராகவே உள்ளோம். தகவல்களை வழங்குவதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

தேசிய பாதுகாப்புப் பற்றி உணராமல் மக்களைச் சிலர் குழப்பி வருகின்றனர். எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் சிறந்த அரசியல் தலைமைகளாக இருக்கின்றனர்.

ஒரு சில அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக அரசியல் செய்பவர்கள். அவர்களே மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை விதைத்து வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் தமிழர்.

இது இனப்பிரச்சினை இல்லை. 2009ஆம் ஆண்டு போர் முடிந்ததிலிருந்து கடந்த 7 ஆண்டுகளில் இவ்வாறான சம்பவம் நடைபெறவில்லை. நாம் ஓர் இனத்துக்கு மாத்திரம் உரித்தான இராணுவம் அல்ல.

இந்த நாட்டின் இராணுவம். அனைத்து மக்களின் வரிப்பணத்திலேயே எங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. பொதுமக்களுக்காகவே நாம் பணிபுரிகின்றோம்.

நாட்டில் என்ன நடக்கின்றது என்பது பாமர மக்களுக்குப் புரியவில்லை. நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் அவர்களுக்கு உரிய அறிவை வழங்குவது ஊடகங்களின் கடமை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: