மலேசியாவில் வேலை செய்யும் சில ஈழத் தமிழர்கள், தீபவளிக்கு என்று ஒரு பார்டி செய்துள்ளார்கள். இதில் சில சிங்களவர்களும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. சாராயம் ஆறாய் பாய்ந்த நிலையில் இவர்கள் போதையில் படு சகஜமாக இருந்துள்ளார்கள். ஆனால் அங்கே இருந்த தமிழ் இளைஞர் ஒருவரி மிகவும் விலை உயர்ந்த மோபைல் போனை ஒரு சிங்கள இளைஞர் எடுத்து மறைத்து வைத்துள்ளார். சற்று நேரம் கழித்து போனைக் காணவில்லை என்று தமிழ் இளைஞர் தேடிய வேளை போன் அணைக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அதில் தொலைந்து போன மோபைல் போனை தேடும் ஒருவகையான ஆப் இருந்துள்ளது. அதனை இயக்கினால், மோபைல் போன் ஒருவகையான ஒலியை எழுப்புமாம்.
இந்த விடையம் குறித்த சிங்களவருக்கு தெரியாது. இதனால் போனை மறைத்து வைத்தவர் வசமாக மாட்டிக்கொண்டார். “அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை” அதுவரை சேர்ந்து குடித்துக்கொண்டு இருந்த தமிழ் இளைஞர்கள் திடீரேன மறைத்து வைத்திருந்த வாள் கத்திகளை கொண்டு, இச்சிங்களவர்களை ஓட ஓட வெட்டியுள்ளார்கள். நாங்கள் சும்மாவே யாழ்பாணத்தில் வெட்டிக் கொள்வோம். அதுவும் எங்களை நீங்கள் சூடேற்றினால் என்ன செய்வோம் என்று எமக்கே தெரியாது என்று டயலக் வேறு பேசி வெட்டியுள்ளார்கள்.
துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தெறித்து சிங்களவர்கள் ஓடியுள்ளார்கள். இறுதியாக பொலிசார் பாய்ந்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்கள். புகைப்படங்கள் இணைப்பு.
இது குடிக்காரகளுக்குள் நடந்த வெட்டு குத்து ! திருட்டு.!!! இதற்கு ஏன்
தமிழர், சிங்களவர் என்று பெயரிட வேண்டும் ????